சென்னை, பிப்.23- தூத்துக்குடியில் கடல் சார் பயிற்சிக் கல்லூரி அமை க்க தமி ழகஅரசுஅனுமதிஅளித்துள்ளது. தூத்துக்குடி அருகே தரு வைக்குளம் என்ற இடத் தில், தமிழ்நாடு கடல்சார் கல்லூரி தொடங்க 6 ஹெக் டேர் நிலத் தை மாவட்ட ஆட்சியர் ஒதுக் கியுள்ளார். இந்த கல்லூரியில் 360 மாண வர்கள் 4ஆண்டுகள் அங்கேயே தங்கி படிக்கும் வகையில் விடுதியும் கட்டப் படுகிறது. கடல்சார் கல்லூரி கட்டுவதற்காக ரூ.19 கோடி செலவு ஆகும் என்றும், ஆண் டுதோறும் தொடரும் செலவின மாக ரூ.2.86 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. திறமையான கப்பல் பணி யாளர்களைஉருவாக்குவதற்கு, பொது மற்றும் தனியார் கூட் டாண்மையில் தமிழ்நாடு கடல்சார் கல்லூரி தொடங்க தமிழக அரசு கொள்கை அள வில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொது மற்றும் தனியார் கூட் டாண்மையில் பங்குதாரரை, போட்டிஏலம்முறையில்தேர்வு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல்கள், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: