லக்னோ, பிப்.23- உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 5-வது கட்டத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித் தனர். 1.56 கோடி வாக்காளர் களை கொண்ட 49 தொகுதி களில் வியாழக்கிழமை நட ந்த வாக்குப்பதிவில் 57 சத வீத வாக்குகள் பதிவாகின. பலத்த பாதுகாப்புடன் நடந்த 5 – வது கட்டத் தேர் தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. கடந்த 2007ம்ஆண்டு சட்ட சபைத் தேர்தலின்போது, இந்தத் தொகுதிகளில் 47.57 சதவீத வாக்குகள் பதிவாகி யிருந்தன. மேம்பாட்டுப் பணிகள் பிரச்சனைத் தொ டர்பாக எடா, லலித்பூர், ஜலன், ஹமிர்பூர் பகுதிகளில் மக்கள் தேர்தலைப் புறக் கணித்தனர். கான்பூரில் தேர் தல் அதிகாரிகளுக்கும், மக்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காண்ட் பகுதி யில் 75 சதவீத வாக்காளர் களின் பெயர்கள் மயமாகி யுள்ளதாக உள்ளூர் காங் கிரஸ் வேட்பாளர் குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தலில் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சிவபால்சிங் யாதவ், பாஜக தலைவர் உமாபாரதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல் யாண் சிங் உள்பட 829 வேட்பாளர்கள் போட் டியிட்டனர். 5- வது கட்டத் தேர்தல் சமாஜ்வாதி கட்சி ஆதிக்கம் உள்ள பண்டல் காண்ட் பிராந்திய தொகுதி களில் நடந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.