வரலாற்று நினைவுகள் மனதில் எழுத்துக் களாக பதிவாவதில்லை. அவை காட்சி களாகவே படிமம் கொள்கின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது வார்த்தைகளால் மட்டும் வர்ணித்து புரிந்து கொள்ளக்கூடியதல்ல. பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், தொழி லாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் வீரஞ் செறிந்த போராட்டங்களாலும், விலைமதிப் பில்லா இன்னுயிர்த் தியாகங்களாலும் தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய பெருமை வாய்ந்த கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறு ஆவ ணங்களாக இருப்பதைக் காட்டிலும், பல லட் சக்கணக்கான உழைப்பாளி மக்களின் மனங் களில் உயிரோட்டமான படிமமாகவே இருக் கின்றன. எனினும் பதிவு செய்யப்படாத வரலாறுகள் மறைக்கப்பட்ட வரலாறுகளாக எளிதில் கால வெள்ளத்தில் கரைந்து போகவும், எதிராளி களால் திரிக்கவும் ஏதுவாகிறது. இத்தகைய பின்புலத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாட்டில் அற்புதமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வர லாற்றுக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. நாகை தென்னிந்திய திருச்சபை மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமை வாய்ந்த போராட்டங்கள், வரலாற்றுக் குறிப்புகள் தியாகத் தழும்பேறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப் படங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற் றுள்ளன. நாகை நகர மக்கள் பலர் ஆர்வத்தோடு இக் கண்காட்சியைக் கண்டு செல்கின்றனர். மர பார்ந்த கல்வித் தளத்திலும், பள்ளி – கல் லூரிகளிலும் இடம் பெற்றிராத இந்த வரலாற்றுச் சம்பவங்கள், ஏடறியா வரலாறாக எழுத்தறியா மக்களின் இதயங்களோடு உரையாடுபவை யாக அமைந்திருக்கின்றன. பார்ப்போர் கண்கள் படங்களோடு பேசுவதின் உள்பொருளாக இந்த உணர்வுகள் பொதிந்திருக்கின்றன. கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் போராட்டங் கள் முதல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள், வாச்சாத்தி, உத்தப்புரம் என தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் வரை எண் ணற்ற வரலாற்றுப் பதிவுகள் உணர்வைத் தூண்டுவனவாக உள்ளன. அதேபோல் இம்மாநாட்டில் பங்கேற்றிருக் கும் மூத்த தலைமுறை தலைவர்கள் முதல் நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத் திரங்களான இளைய தலைமுறையைச் சேர்ந் தோரும் இக்கண்காட்சியைப் பார்வையிட் டனர். மூத்த தலைவர்களைத் தங்கள் கடந்த காலங்களின் எண்ணற்ற போராட்ட அனு பவத்தை அசை போட வைப்பதாக இந்த கண்காட்சி இருந்ததென்றால், இளையோ ருக்கோ இனி வரும் காலங்களில் எத்தகைய மகத்தான பாதையில் நம் பயணம் அமைய வேண்டும் என மனதில் வெளிச்சம் பாய்ச் சுவதாக இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் நெஞ்சத்தோடு உறவாடின. மாநாட் டின் நிறைவு நாளான 25ம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நாகைக்கு வருகை தரும் பல லட்சம் செங்கொடிப் புதல்வர் களுக்கு இக்கண்காட்சி பயனுள்ள ஒரு காலப் பெட்டகமாக திகழும் என்பது உறுதி.

Leave A Reply

%d bloggers like this: