புதுதில்லி, பிப். 23 – இந்திய மகளிர் அணியின் பலவீனம் வெட்ட வெளிச்ச மாகத் தெரிந்தது. தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 5-2 என்ற கோல்களில் இந்திய அணியைத் தோற்கடித்தது. இந்திய மகளிரின் உடல்தகுதி கேள்விக்குறியானது. 52ம் நிமிடம் வரை இரு அணிகளும் 2-2 எனச்சமநிலையில் இருந் தன. அடுத்த 18 நிமிடங்களில் தென் ஆப்பிரிக்கா மூன்று கோல் அடித்து வென்றது. இந்திய மகளிர் களைத்துவிட்டனர். இந்திய தற்காப்பும் பலவீனமாக இருந்ததால், சில வீராங்கனைகள் மைதானம் முழுவதும் ஓடிக் களைத்தனர். முதல் 15 நிமிடங்களில் கிடைத்த முதல் பெனால்டி கார்ன ரை இந்தியா வீணாக்கியது. அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று பெனால்டி கிடைத்தது. மூன்றாவதில் டிர்க்கி சேம்பர் லின் முதல் கோலை அடித்தார். 23ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டிகார் னரில் அசுந்தா லக்ரா கோல் அடித்து கோலைச் சமனாக்கினார். முதல் பாதியின் இறுதியில் டிர்க்கி இரண்டாவது கோலை அடித்து தென் ஆப்பிரிக்காவை 2-1 என முன்னிலைப்படுத்தினார். இரண்டாம் பாதியில் இந்தியாவின் ஜாய்தீப் கவுர் அடித்த கோலை நடுவர் நிராகரித்தார். 52ம் நிமிடத்தில் சௌந்தர்யா அடித்த கோலுடன் ஸ்கோர் 2-2 என ஆனது. தென் ஆப்பிரிக்கா அடித்த அடுத்த இருகோல்களும் சர்ச் சைக்குரியவை. எல்லைக்கோட்டைக் கடந்த பந்தைத் திரட்டி ஒரு கோல் அடிக்கப்பட்டது என்றும், அடுத்த கோல் தென் ஆப்பிரிக்க வீரர்களின் மட்டையில் படாமல் சென்றது என்றும் இந்தியத் தரப்பு கூறுகிறது. சுலட் டயமண்ட்ஸ் இறுதி கோலை அடித்தார். இந்தியா ஏழுபுள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள் ளது. எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலி யை கடைசிப் போட்டியில் இந்தியா வென் றாக வேண்டும். தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: