மெல்போர்ன், பிப். 23 – ஆஸ்திரேலியாவில் ஆளுங்கட்சிக்குள் நடந்த அதிகாரச் சண்டை வெளி யில் வந்துவிட்டது. கட்சி யின் தலைவர் பதவிக்கு பிரத மர் ஜுலியா கில்லர்ட் தேர் தல் அறிவித்துள்ளார். தேர் தல் முடிவை இறுதியான தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முன்னாள் தலைவர் கெவின் ரூடிடம் கூறியுள்ளார். பிப்ரவரி 27 காலை 10 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரம்) லேபர் கட்சியின் தலை வர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று கில் லர்ட் செய்தியாளர்களிடம் கூறினார். நாட்டின் நலனுக் காகக் கட்சிக்குள் நடக்கும் குழப்பங்கள் அகல வேண் டும். ஆஸ்திரேலிய மக்கள் இதுபற்றி அருவருப்பு அடைந்துள்ளனர். இது முடிக்கப்பட வேண்டும் என்று கில்லர்ட் பேசியதாக ‘தி ஆஸ்திரேலியன்’ செய் தித்தாள் கூறியது. தேர்தலில் வெற்றிபெறு வேன் என்று கூறிய கில் லர்ட், தோற்றுவிட்டால் மீண்டும் சவால் விடமாட் டேன் என்றும் சொன்னார். ரூடும் இதுபோல் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசை நிலைகுலையச் செய்யும் பிரச்சாரத்தில் நீண்டநாட்களாகக் கெவின் ரூட் ஈடுபட்டு வருகிறார் என்று கில்லர்ட் குற்றம் சாட்டினார். தன்னைப் பற்றி தவறான தகவல்களை கசிய விடும் அவர், 2010ல் நடந்த தேர்தல் மோசடி யானது என ரூட் கூறினார் என்று கில்லார்ட் தெரிவித் தார். வாஷிங்டனில் உள்ள கெவின்ரூட் செய்தியாளர் கள் கூட்டத்தில், வெளி யுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகு வதாக அறிவித்தார். வர்த்த கம் மற்றும் தொழில் நிறு வனங்களுடன் கில்லர்ட் அரசுக்கு பலவீனமான உறவுகளே உள்ளன என்று அவர் கூறினார். அவர் பிர தமர் பதவியிலிருந்து வில கிய பின் எடுக்கப்பட்ட முடி வுகள் அனைத்தையும் அவர் விமர்சித்தார். 2010ம் ஆண்டில் கட்சிக்குள் ஏற் பட்ட உள் புரட்சியில் அன் றைய பிரதமர் கெவின் ரூட் விரட்டப்பட்டார். அவரு டைய துணைத் தலைவ ரான கில்லர்ட் அவரிடம் சவால் விட்டு வென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.