தில்லி-லாகூர் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 பிப்ர வரி 18 நள்ளிரவு 68 பயணிகள் உயி ரிழக்கக் காரணமான பயங்கரவாதிகளின் குண்டு வெ டிப்புத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனா ய்வு ஏஜென்சி ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை இயக்கங்களுடன் தொடர்புடைய கமல் சௌஹான் என்பவனைக் கைது செய் திருப்பதன் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு இப்பயங்கரவாதத் தாக்குதலில் உள்ள தொடர்பு நிலைநிறுத் தப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக் கும் இவன் மத்தியப் பிரதேசத்திலிருந்து நீண்டகாலமாகச் செயல்படும் ஆர் எஸ்எஸ் தொண்டர்களில் இரண்டாம வர். முன்னதாக, 2010 ஜூனில் லோ கேஷ் ஷர்மா என்பவனும் மத்தியப் பிரதேசத்திலிருந்து இத்தாக்குதல் தொ டர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட் டிருக்கிறான். வெடிகுண்டு தாக்குதலின் போது, இவர்கள் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருந்ததாக புலனாய்வு ஏஜென்சிகள் புதி தாகக் குற்றச்சாட்டுகள் புனைந்திருப்பதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன. ஆர்எஸ்எஸ்-ஸூம் அதன் துணை அமைப்புகளும் 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக் குதல், 2007 மே 18 அன்று ஹைதராபாத்தில் மெக்கா மசூதி மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், 2007 அக்டோபர் 11இல் ஆஜ்மீர் ஷெரீபில் உள்ள தர்காவில் நடைபெற்ற பயங் கரவாதத் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத் திலும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என் கிற முக்கிய தகவல்கள் இப்போது வெளி யாகி இருக்கின் றன. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் சங்கிலித் தொடர் போன்ற இணைப்புகள் மூலம் இந்துத்துவா பயங்கர வாத வலைப் பின்னல் பின்னப்பட்டிருப்பது இப்போது கிடைத்துள்ள துப்புகளின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி, 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்ட த்தின்போதே, இதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. ‘‘மகாராஷ் டிரா மாநிலம் ஜால் கான் மாவட்டத்தில் 2003இல் பர்பாணி, ஜால்னாவில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்கள், 2005இல் உத்தரப்பிர தேசம் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல், 2006இல் நாண்டட் என்னு மிடத்தில் நடைபெற்ற தாக்குதல், 2008 ஜனவரியில் தமிழகத்தில் திருநெல் வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்எஸ் எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சம் பவம், 2008 ஆகஸ்டில் கான்பூரில் நடை பெற்ற சம்பவம் ஆகியவற்றில் பஜ்ரங் தளமும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்ற பல அமைப்புகளும் சம்பந் தப்பட்டிருக்கின்றன என்று காவல்துறையி னரின் புலனாய்வுகள் வெளிப்படுத்தி இருக் கின்றன. இவ்வழக்குகள் அனைத்தையும் எவ்விதமான பாரபட்சமுமின்றி மிகவும் ஆழ மாக விசாரணை செய்வதன் மூலம் மட்டுமே நம் நாட்டின் உள்நாட்டுப் பாது காப்பை வலுப் படுத்த முடியும்’’ என்று அப்போதே நாம் கூறி னோம். இதனைத் தொடர்ந்தும் அதன்பின் கிடைத்திட்ட துப்புகளின் அடிப்படை யிலும் மத்திய உள்துறை அமைச்சகத் தின் சார்பில் 2010 ஜூலை மாதம் வெளி யிடப்பட்ட அறிக் கையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரணை யினை மேற் கொள்ளும் என்று அறிவிக்கப்பட் டது. இத்தகையப் புலனாய்வுகள்தான் தற் போதைய கைதுகளுக்கு இட்டுச் சென்றுள் ளன. மேலும், ஊடகங்களில் தெரி விக்கப்பட் டுள்ள தகவல்களிலிருந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் வெடி மருந்துகளைத் தயார் செய்வதிலும், 2002இல் நடைபெற்ற தொடர் தாக்குதல்களைத் திட்ட மிட்டதையும் புலனாய்வுகள்வெளிக்கொண்டு வந்திருக்கின்றன என்றும் தெரிய வருகிறது. வாஜ்பாய் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், , தான் ஆட்சியில் நீடிப்பதற்காகத் தன் கூட்டணி யில் உள்ள கட்சிகளைத் திருப்திப் படுத்துவ தற்காக அயோத்தி யில் ராமருக்காகக் கோ வில் கட்டுதலை ஒத்தி வைத்ததன் மூலம் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தாமல் நீர்த்துப்போகச் செய்ததும் 2002 இல் குஜராத்தில் நடைபெற்றதுபோல் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதி ரான இனப்படுகொலைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல முடியாததும் தீவிர இந்துத் துவா பயங்கரவாதம் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நம்பப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய் யப்பட்டுள்ள நபர்களுக்கும் தங்கள் அமைப் பிற்கும் எவ்விதச் சம்பந்த முமில்லை என் றும், இயக்கத்திலிருந்து விலகிச் சென்ற சில நபர்கள் செய்த நடவடிக்கைகளை வைத்து ஒட்டு மொத்த இயக்கத்தையே குறைகூறக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் எப் போ தும் கூறும் பழைய பல்லவியையே இப்போ தும் கூறும் என்பது நிச்சயம். இவ்வாறு இவர் கள் கூறுவது ஒன்றும் புதிதல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாதுராம் கோட் சேயும் இதைத்தான் கூறினார். ஆனால் அதே சமயத்தில், ‘‘சகோதரர்களா கிய நாங்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் தீவிரமான உறுப்பினர்களே’’ என்று ஓர் ஊடகத்தின் நேர்காணலின்போது நாது ராம் கோட்சேயின் சகோதரர் சொல்லியிரு ப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வர லாற்றையும் அதன் நடைமுறைகளையும் ஆய்வுசெய்வோர், அவ்வியக்கத்தின் முக்கிய உள்வட்டத்தில் உள்ள (‘உடிசந’) தலைவர் களுக்கும், வெளி வட்டத்தில் உள்ள (‘கசiபேந’) தலைவர்களுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என்பதைப் பொய்ப்பித்திருக்கிறார் கள். இந்துக்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் வன்முறையைத் தங்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆர் எஸ்எஸ் இயக்கத்திற்கு ஓர் நீண்ட வரலாறு உண்டு. ஜின்னா கூறுவதற்கு ஈராண்டுக ளுக்கு முன்பே சாவர்க்கர்தான் இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்கும் தனித் தனி நாடுகள் தேவை என்று இரு நாடுகள் தத்துவத்தைக் கூறியவர். அனைத்து அரசியல்கட்சிகளிலும் உள்ள இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்தையும் முன்வைத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவாரின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் பி.எஸ். மூஞ்சே இதனால் உத்வேகம் பெற்று, இத்தாலி சென்று, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். இவர்களின் சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. இத்தாலிய பாசிசம் தன் இளை ஞர்களுக்கு அளித்திடும் பாசிச வெறிப் பயி ற்சிகள் குறித்து மிகவும் புளகாங்கிதம் அடை ந்து, மார்ச் 20 அன்று அவர் தன் நாட் குறிப் பில் எழுதியிருக்கிறார். மூஞ்சே இந்தியா திரு ம்பிய பிறகு, 1935இல் நாசிக்கில் மத்தியஇந்து மிலிட்டரி கல்வி சொசைட்டி என்னும் அமைப் பை நிறுவினார். இது தான் 1937இல் நிறுவப் பட்டு, தற்போது இந்துத்துவா பயங்கரவாதத் திற்குப் பயி ற்சி அளித்து வரும் போன்சாலா மிலிட்டரி பள்ளிக்கு முன்னோடியாகும். 1939இல் கோல்வால்கர், நாஜி பாசிச த்தின் கீழ் யூத வெறியைப் பரப்பிய இட்லரை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவரது இயக்க நடவடிக்கைகள் ‘‘நமக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்திடும். அவற்றை நன்கு கற்று பயன்படுத்திக் கொள்வோம்’’ என்று கூறியிருக்கிறார். பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் கொடுக்குகளாகச் செயல்படும் பஜ்ரங்தளம், விஎச்பி ஆகியவை தாங்கள் ‘கர சேவகர் களு க்கு’ அளித்த பயிற்சிகள் குறித்து வெளிப் படையாகவே பெருமைப்பட்டன. ‘‘இந்து பயங்கரவாதம் என்று ஒட்டு மொத்த ஓர் இனத்தையே எப்படி நீங்கள் பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்திற்குள் இணைக்கிறீர்கள்’’ என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் அடிக்கடி கேள்விகள் கேட்கிறது. அதன் முந்தைய தலைவர் ஒருபடி மேலேயே சென்று, ‘‘இவ்வாறு கூறுவது நமது இயக்கத்தையே அவமதிக்கும் சதி வேலை. இந்துத்துவா சக்திகளை அவமதித் திடவும் தோற்கடித்திடவும் மேற்கொள்ளப் படும் அரசியல் சதி’’ என்று கூறினார். மிக வும் திறமையுடன் இவர்கள் ‘‘இந்துத்துவா’’ என்பதையும் ‘‘இந்து’’ என்பதையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறார்கள். இந்துத் துவா பயங்கரவாதத் தைக் குறித்துத்தான் நாம் கூறுகிறோமே யொழிய, இந்து பயங்கர வாதம் குறித்து அல்ல. தங்கள் இனத்தில் உள்ள சிலர் மதத்தின் அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபடுவதற்காக அந்த இனத்தைச் சேர்ந்த அனைவரையுமே பொறுப்பாக்க முடியாது என்பது தெளிவு. .இதே அளவுகோள் அனைத்து மதத்தினருக் கும் பொருந்தும். ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு மட்டும் அப்படி அல்ல. ஆர்எஸ்எஸ் தொடர்ந்து ‘‘இஸ்லாமிய பயங் கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக் குவோம்’’ என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் இரட்டை நிலையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தற்போதைய இந்தியா என்னும் நவீன மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசை வெறி பிடித்த மத சகிப்புத் தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்ற வேண்டும் என்பதற்கான தத்துவார்த்த வேர்களும் இதில் பிரதிபலிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. இது தேச விரோதமானது. எனவே இதனை ஒடுக்குவதில் நாடு எவ்வித பொறுமையை யும் காட்டக்கூடாது. மேலும், அனைத்து வித மான பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்து வலுப்படுத்தும். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழித்திடும். நமது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்திடவும் பாது காத்திடவும் ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னு டைய அரசியல் குறிக்கோளை எய்துவதற் காக மேற்கொள்ளும் இத்தகைய கேடுபயக் கக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தீர்மானகரமான முறையில் முறியடித்தாக வேண்டும். தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: