தூத்துக்குடி, பிப்.23- தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் அலங்கார கடல்மீன் வளர்ப்புப் பயிற்சி பிப்ரவரி 29ம் தேதி தொ டங்குகிறது. இது குறித்து தூத்துக் குடி மீன்வளக் கல்லூரி முத ல்வர் நந்திஷா, தனது அறி க்கையில் குறிப்பிட்டிருப் பதாவது:- தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் அலங் கார கடல்மீன் வளர்ப்பு மற் றும் இனப்பெருக்கம் குறி த்த 3 நாட்கள் பயிற்சி, தரு வைகுளத்தில் உள்ள கடல் சார் தொழில்நுட்ப ஆராய் ச்சி மற்றும் விரிவாக்க மை யத்தில் பிப்ரவரி 29ம் தேதி தொடங்குகிறது. கொச்சியில் கடல் உயி ரின வளங்கள் மற்றும் உயி ரின வாழ்க்கையை ஆராய் தல் மையம் உள்ளது. இந்த மையத்தின் மூலம் மன்னார் வளைகுடாவில்உள்ளகடல் அலங்கார மீன்கள் பொரிப் பகத்தில் இனப்பெருக்கம் செய்தல் மற்றும் அத்தகைய தொழில்நுட்பங்களை கடலோர மக்களிடையே பரப்புதல் என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடத்தப் பட உள்ளது. கல்லூரியின் மீன்வள விரிவாக்கத் துறை சார்பில் பயிற்சி நடக்கிறது. பல்வேறு கடல் அலங்கார மீன் இனங் கள், கடல் மீன்களின் இனப் பெருக்க தொழில்நுட்பம், மீன்களுக்கான உயிர் உண வுகள் வளர்ப்பு மற்றும் கடல் அலங்கார மீன் பண்ணை மேலாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து செயல் முறை விளக்கங்களோடு பயிற்சி அளிக்கப்பட உள் ளது. அலங்கார மீன் வளர்ப் பில் ஈடுபட்டுள்ளவர்க ளுக்கும், மீனவ மக்களுக் கும் மற்றும் சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த விரும்புகிறவர்களுக்கும் இது பயன் உள்ளதாகவும், மாற்றுத் தொழிலாகவும் இருக்கும். இந்த பயிற்சியில் கலந்து கொள்கிறவர்களுக்கு பயிற்சி சான்றிதழும் வழங் கப்படும். பயிற்சியில் கலந்து கொ ள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை பிப்ர வரி 28ம் தேதிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும். பயி ற்சி தொடர்பான மேலும் விவரங்களை மீன்வள விரி வாக்கத்துறை இணை பேரா சிரியர் மற்றும் முதன்மை ஆய்வாளர் ந.வ.சுஜாத் குமாரை நேரடியாகவோ அல்லது 94431 26894 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள லாம். சேர விரும்புகிறவர் கள் தங்கள் பெயர்களையும் பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் நந்திஷா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: