பியூனஸ் ஏர்ஸ்,பிப்.23- அர்ஜென்டினா நாட் டின் ரயில் நிலையத்தில் ஏற் பட்ட விபத்தில் 49 பேர் பலி யாகினர். 500 பேர் காயம் அடைந்தனர். அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் ரயில் நிலையத்தில் பயணி கள் ரயில் ஒன்று ரயில் நிலை யத்திற்குள் வந்து கொண்டி ருந்தது. அப்போது எதிர் பாராதவிதமாக தண்ட வாளத்தின் கடைசிப்பகுதி யில் உள்ள தடுப்புப்பகுதி யில் பயங்கரமாக மோதி ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 49 பேர் பலியாயினர். 500-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந் தனர். காயமடைந்தவர்களை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த் தனர். கடந்த 10 ஆண்டு களில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்து இது என ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர். கடந்த 1970-ம் ஆண்டு பிப்.1-ம் தேதி இதே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில் 200 பேர் பலியாகினர்,

Leave A Reply

%d bloggers like this: