குவாகாத்தி, பிப். 23 – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அதிக வரு மானம் கிடைக்கும் தொழில் களுக்கும் அரசுத்திட்டப் பணி களுக்கும் சென்றுவிடுவதால், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற ஆட்கள் இல்லா மல் தள்ளாடும் நிலை ஏற்பட் டுள்ளது. தோட்டத்தொழிலா ளர்களுக்கு தினமும் ரூ.71-50 சம்பளம் தரப்படுகிறது. அதை விட அரசு திட்டங்களில் கூடு தல் சம்பளம் தரப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கும் திட்டமாக மத் திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஆண்டுக்கு 100 நாட் கள் செயல்படுத்தப்படுகிறது. அதேபோன்று தேசிய நெடுஞ் சாலைத் திட்டங்கள் மற்றும் இதர பொதுத்துறை திட்டப் பணிகளுக்கு பணியாளர்கள் சென்று விடுகின்றனர். தோட் டத் தொழிலைவிட இந்த அரசு திட்டங்களில் கூடுதல் சம் பளம் தரப்படுகிறது. இதனால் அசாம் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10-12 சதவீத தொழிலாளர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. வரக் கூடிய ஆண்டுகளில் இந்த நிலைமை இன்னும் மோச மாகும் என தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் அஞ்சுகிறார் கள். இந்திய தேயிலை சங்கத் தின் அசாம் மாநிலப் பிரிவு விரைவில் கூடி, பாரம்பரிய தோட்டத்தொழிலாளர்கள் வெளியேற்றத்தை தடுக்கவும் அன்றாடப் பணியாளர்களை கவரவும் தீர்வு காண்கிறது. இந்திய தேயிலை சங்கத் தின் அசாம் மாநிலச் செயலா ளர் சந்தீப் கோஷ் கூறுகை யில், தற்போதைய தொழிலா ளர் பற்றாக்குறை சீராகாத சூழ லில் எந்திர முறையை பின் பற்ற வேண்டிய கட்டாயம் ஏற் படும் என்றார். மேல் அசாமில், திப்ருகர், சிப்சாகர், தின்சுகியா பகுதிக ளில் இந்திய தேயிலை சங்கத் தின் மாநிலப் பிரிவுக்கு 240 தோட்டங்கள் உள்ளன. இங்கு ஊழியர்களின் குடும்பங்கள் உள்பட 5.50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 1.6லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர்கள். இதே அளவு தற்காலிக ஊழியர்கள் சேர்க் கப்படுகின்றனர். தற்போது 5 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர் கள் கூடுதல் வருமானம் தேடி விலகியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: