பொள்ளாச்சி, பிப். 22- பொள்ளாச்சி அருகே 25 நாட்கள் குடிநீர் வராததால் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ளது ரங்கசமுத்தி ரம். இங்கு 25 நாட்கள் ஆகியும் குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட் டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா, ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சித் தலைவர் சின்னத்தாய், ஒன்றிய பிரதிநிதி பாலு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,25 நாட்கள் ஆகி யும் குடிநீர் வரவில்லை. இதனால் மிகுந்த சிரமமாக உள்ளது. இதை முறைப்படுத்தி வாரம் ஒரு நாள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வட்டார வளர்ச்சி அதிகாரி அம்பிகா பேசும்போது, மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தாய் திட்டத்தில் ரங்கசமுத்திரத்தில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித் தார். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட் டனர்.

Leave A Reply

%d bloggers like this: