புதுதில்லி, பிப்.22- இரண்டாம் பாதியின் முதல் ஐந்து நிமிடங்களி லேயே தோற்பது உறுதி என்று பிரான்ஸ் உணர்ந்துவிட்டது. ஆனாலும் கடைசி வரை அத னிடம் முயற்சிக்கு குறை வில்லை. மூன்றாவது சுழல் போட்டியில் இந்தியா 6-2 என்ற கோல்களில் பிரான் சைத் தோற்கடித்தது. 2012 லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டிகள் புது தில்லி தயான்சந்த் மைதானத் தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் போட்டியில் இந் தியாவும் பிரான்சும் மோதின. ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் இந்தியவீரர் சிவேந்திர சிங் கோல் அடித் தார். இடது சிறகில் எதிரியிட மிருந்து பந்தைப் பறித்த காண் டேகர், அதை சர்வன்ஜித் சிங் கடம் அனுப்பினார். அதை அவர் சிவேந்திர சிங்கிடம் தள் ளிவிட கோல் அருகே நின்ற சிவேந்திரா பந்தை கோலுக் குள் தள்ளிவிட்டார். அடுத்து கிடைத்த பெனால்டிகார்னரில் சந்தீப் சிங் அபாரமாக கோல் அடித் தார். 30ம் நிமிடத்தில் மை தானத்தின் பாதியில் இருந்து பந்துடன் முன்னேறிய எஸ்.வி. சுனிலை பிரான்சின் கோல் அரை வட்டத்தில் பிரடரிக் வெர்ரியர் வாரிவிட்டார். அதில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் கை சந்தீப் சிங் கோலாக மாற் றினார். இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும் நேரத்தில் லூகாஸ் செவஸ்ட்டர் பெனால்டி கார்னரில் பிரான்சின் முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதி தொடங் கிய இரண்டாம் நிமிடத்தில் ஆட்டத்தின் 37ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்ன ரில் சந்தீப் சிங் கோல் அடித் தார். இது அவருடைய ஹேட்டி ரிக் சாதனையாகும். தகுதி போட்டிகளின் முதல் ஹேட்டி ரிக்கும் இதுதான். அடுத்து 39ம் நிமிடத்தில் எஸ்.வி.சுனில் ஒரு கோல் அடித்தார். 57ம் நிமிடத்தில் பிரான் சின் பேபியன் மேக்னர் அணி யின் இரண்டாம் கோலை அடித்தார். 62ம் நிமிடத்தில் காண்டேகர் இந்தியாவின் ஆறாவது கோலை அடித்தார். மற்றொரு போட்டியில் போலந்து 7-2 என இத்தாலியையும், கனடா 15-1 என சிங்கப்பூரை யும் வீழ்த்தின. இந்தியா 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பிரான்ஸ், கனடா. போலந்து ஆகியவை 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. சிங்கப் பூரும், இத்தாலியும் புள்ளிகள் எதுவும் எடுக்காமல் கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.