அகமதாபாத், பிப். 22 – விண்வெளி ஆய்வாளர் களுக்கு இந்த வாரம் பெரும் வான் திருவிழாவாக அமை கிறது. அவர்கள், வெறும் கண்களால், 5 கிரகங்களை கண்டுகளிக்க முடியும். இந்த வாரம் முதல் மார்ச் மாத துவக்கம் வரை சிறிய பை னாகுலர் மற்றும் அல்லது டெலோஸ் கோப் உதவி யுடன் இந்த கிரகங்களின் வடிவங்களை கண்டுகளிக்க முடியும். புதன், வெள்ளி, செவ் வாய், வியாழன், சனி ஆகிய 5 கிரகங்களை வெறும் கண் களால் காண முடியும். பொதுவாக அனைத்துக் கிர கங்களும் ஒரே இரவில் காணக்கூடியதாக இருக் காது என குஜராத் அறி வியல் நகர மூத்த விஞ்ஞானி டாக்டர் நரோத்தட் ஷாகு கூறினார். அறிவியல் நகரத்தில், 5 கிரகங்களை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. மாலை நேர வானத்தில் முதலில் வரும் கிரகங்களாக வெள்ளியும் வியாழனும் உள்ளன. வெள்ளி மிகச்சிறியக் கிரகமாகவும் வியாழன் பெரிய கிரகமாக வும் உள்ளன. பிப்ரவரி மாதத்தின் இறு தியில் வெள்ளிக்கிரகத்தை கண்டறிய நிலாவைப் பயன் படுத்த வேண்டும். பிப்ரவரி 24 – 26 தேதிகளில் மெல்லிய பிறை நில வெள்ளிக்கிரகம் வழியாக கடக்கும் வியாழன் கிரகம் மாலை தோன்றி, நள் ளிரவு வரை காணப்படும். இது கிழக்கில் தோன்றி, மேற்கில் மறையும். பிப்ரவரி மாதத்தில், செவ்வாய் கிரகம் மிக துல் லியமாக வானில் தெரியும். கடந்த 2 ஆண்டுகளில், செவ் வாய்க்கிரகம், மிக பிரகாச மாக ஜொலிக்கும். இரவு 9 மணி அளவில் இந்த சிவப்பு கிரகம் எழும். அதே நேரத் தில் வெள்ளிக்கிரகம் மேற் கில் மறையும். சனிக்கிரகம் நள்ளிரவில் எழுகிறது. புதன் கிரகத்தை எளிதில் காண முடியாது. உரிய வழிகாட்டு தலால், அதனை கண்டு பிடிக்க முடியும்.

Leave A Reply