திருவனந்தபுரம், பிப். 22 – சோசலிஸ்ட் ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவராக எம்.பி.வீரேந்திரகுமார் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 140 உறுப்பினர்கள் கொண்ட மாநிலக்குழு கூட் டம் அவரை தலைவராக செவ் வாயன்று தேர்வு செய்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத் தில் இருந்து எம்.பி.வீரேந்திர குமார் தலைமையில் வெளி யேறியவர்கள் சோசலிஸ்ட் ஜனதா தளக் கட்சியை நிறு வியபின் நடைபெறும் முதல் தேர்தல் இது. தற்போது எஸ் ஜேடி கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள் ளது. 2009 நாடாளுமன்றத் தேர் தலின்போது இக்கட்சி இடது ஜனநாயக முன்னணியை விட்டு வெளியேறியது. கேரள சட்டமன்றத்தில் இதற்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ள னர். கேரள விவசாய அமைச் சர் கே.பி.மோகனன் இக்கட் சியைச் சேர்ந்தவர்.

Leave A Reply

%d bloggers like this: