சென்னை, பிப். 22- எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற கூட்டத் தொடரிலிருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத் திருந்தார். அந்த வழக்கு புதனன்று (பிப். 22) நீதிபதி ராஜேஸ்வரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பாக வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், மணிமாறன் ஆகி யோர் ஆஜரானார்கள். சட்ட சபை செயலர் சார்பாக வெங்கடேஷ், தமிழக அரசு சார்பாக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நடைபெற்ற வாதம் வருமாறு: பி.எஸ்.ராமன்: சட்ட மன்றத்தில் கண்ணியக் குறை வாக நடந்ததாக மனுதா ரரை 10 நாள் சஸ்பெண்ட் செய்திருப்பது சட்டவிரோ தமானது. அவரது அடிப் படை உரிமையை பறிப்ப தாக உள்ளது. 3ம் தேதி உரி மைக்குழு முன்பு ஆஜராக விஜயகாந்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர் எழுத்துபூர்வமாக பதில் அனுப்பினார். பதில் கிடைத்த ஒரு மணி நேரத்துக்குள் அவசர அவசரமாக அதை நிராகரித்துள்ளனர். உரி மைக்குழுவின் விசாரணை அறிக்கையை விஜய்காந் துக்கு தரவில்லை. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து 10 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதவிர எதிர்க்கட்சி தலை வர் என்ற முறையில் அவ ருக்கு வழங்கப்பட்ட சலு கைகளை ரத்து செய்துள்ள னர். சம்பளத்தையும் நிறுத்தி யுள்ளனர். உதவியாளர் களையும் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். இது தவறானது. முந்தைய கூட்டத் தொடரில் 3 நாட்களும், அடுத்த கூட்டத்தொடரில் 7 நாட்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எதிர்க் கட்சி தலைவருக்கு கேபி னட் அந்தஸ்து உள்ளது. சட்டசபை அதிகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட லாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள் ளது. இது போன்ற வழக்கை ஏற்கனவே உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போ தும் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நவநீதகிருஷ்ணன்: சபா நாயகருக்காகவும், சட்ட மன்ற செயலாளருக்காக வும் நான் ஆஜராகவில்லை. ஏற்கனவே இது போன்ற வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அட்வகேட் ஜெனரல் கோர்ட்டுக்கு நண்பராக இருந்து ஆலோசனை கூறி னார். அதுபோல் இப்போது நானும் ஆலோசனை கூற விரும்புகிறேன். வெங்கடேஷ்: சட்ட மன்ற செயலருக்கு நோட் டீஸ் அனுப்புங்கள். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீதிபதி ராஜேஸ்வரன்: மனுதாரரை சஸ்பெண்ட் செய்ததுடன் அவருக்கு வழங் கிய சலுகைகளை ஏன் பறித் தீர்கள். இது தவறல்லவா? உரிமைக்குழுவின் அறிக்கை நகல் கூட அவருக்கு கொடுக் கப்படவில்லை. வரும் 2ம் தேதி சட்டமன்ற செயலர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.