சில ஆண்டுகளுக்கு முன் கவர்ச்சிகர மானதாக அறிமுகமான ஒன்றுதான் தொழில் நிறுவனங்கள், கல்வி நிலைய வளாகங் களுக்குள்ளேயே சென்று, மாணவர்களிடையே யிருந்து தங்களது ஊழியர்களைத் தெரிந் தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்துகிற நடைமுறை. இதனால் திறமையான மாணவர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்புகள் உறுதியாகின்றன, தொழில் நிறுவனங்களுக்கும் தகுதியானவர்கள் கிடைக்கிறார்கள் என்பதாகக் கருதப்பட்டது. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது. தனியார் கல்வி நிறுவனங்களில், தனியார் தொழில் நிறுவனங்களால் தொடங்கப் பட்ட இந்த வளாக நேர்முகத் தேர்வு முறை படிப்படியாக அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும் பரவி, பொதுத்துறை நிறுவனங்களும் அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. காலப்போக்கில் கிடைத்த அனுபவங்கள் வேறு ஒரு கசப்பான புரிதலை ஏற்படுத்தின. கல்வியாளர்கள், மாணவர்களது ஆரோக்கி யமான கல்விச் சூழலில் அக்கறையுள்ளோர், மாணவர் அமைப்புகள் என பலரும் இந்த வளாக நேர்முகத் தேர்வு முறைக்குத் தடை விதிக்க வலியுறுத்தலானார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்கள் புறந்தள்ள முடியாதவை. இது மாணவர்களிடையே கல்வி சார்ந்த அக்கறையை விட, வேலையும் பொருளாதார வேட்டையும் சார்ந்த மனநிலையையே வளர்க்கிறது; புரிதலோடு கூடிய படிப்புக்கு மாறாக, சந்தைக்களத்தில் போட்டிக் குதிரைகளாகத் தயாராவதற்கான மனப்பாடப் படிப்பையே ஊக்குவிக்கிறது; படித்து முடித்துத் திறமைகள் இருந்தும் வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் காத்திருப்போரை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது; அதன் மூலம் ஏற்றத் தாழ்வை அதிகரிக்கிறது என்ற விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு வளாகத் தேர்விலேயே வாய்ப்புகள் உறுதியாகிற மாணவர்கள், குறிப்பிட்ட காலத்திற் குத் தங்களுக்குப் பிடித்தமான வேறு பணிகளுக் குச் செல்வதற்கான வாயில்கள் அடைக்கப் படுகின்றன. பல தனியார் நிறுவனங்கள் சான் றிதழ்களை முதலிலேயே வாங்கி வைத்துக் கொள்ளும் நிலையில், மாணவர்களாக இருந்து நேரடியாக ஊழியர்களானவர்கள் ஒரு சிறைப் பட்ட நிலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதை யெல்லாம் விட முக்கியமானதாக – குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களில் – சமூக நீதிக் கான இட ஒதுக்கீடுக் கொள்கை இந்த நேர் முகத் தேர்வு மூலமாக மறைமுகமாகப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இத்தகைய பின்னணியில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், அரசுத்துறை சார்ந்த உயர்கல்வி நிலையங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடி நியமனத் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தங்களது சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதேபோல், எதிர்காலத்தில் தனியார் நிறு வனங்களும் இவ்வாறு வளாக நேர்முகத் தேர்வு நடத்துவது, கல்விக் கடன் என்ற பெயரில் திறமையாளர்களைத் தங்களது பிடியில் வைத் துக்கொள்வது, நியமனத்தின்போது சான்றிதழ் களைக் கைப்பற்றுவது போன்றவைகளுக்கும் அரசாங்கமே தடை விதிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான கல்விச்சூழலை உறுதிப் படுத்தும்.

Leave A Reply

%d bloggers like this: