சேலம், பிப். 22- சேலத்தை அடுத்த ஆத்தூரில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம கும்பல் முயன் றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடை யார்பாளையத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் அருகிலேயே ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று நள்ளிரவில் ஏடிஎம் கதவை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய் திருந்தது. ஆனால் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் போனதால் இயந் திரத்தை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வங்கியின் மேலாளர் ஜோஸ்வா கிறிஸ்துதாஸ் உடைக்கப் பட்ட இயந்திரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர். இது குறித்து ஆத்தூர் காவல்துறையினரி டம் இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். இப்புகாரினையடுத்து கொள்ளை முயற்சி நடந்த பகுதியை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஆய்வு செய்தனர். மேலும், தடயவி யல் நிபுணர்கள் வருகைதந்து மர்ம கும்பலின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இது காவல்துறையி னர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: