ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லே – லடாக் வட்டாரத்தை ஒரு பெரும் சுற் றுலாத் தலமாக மாற்றுவதற்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மாநில சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் நவாங் ரிக்ஜின் ஜோரா கூறினார். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.22.43 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.4.48 கோடி வழங் கப்பட்டுவிட்டது. இந்த வட்டாரத்தின் புத்தம், பட்டுப் பாதை, கைவினைப் பொருள்கள் மையம் உள்ளிட்ட வளமான கலாச்சார மரபை முன்னெடுத்துச் செல் லும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற் கொள்ளப்படும் என்றார் அவர். இத்திட்டத்திற்கான நிலத்தை மாநில அரசு இலவசமாகவே வழங்கும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply