திருவனந்தபுரம், பிப். 22- பாலக்காடு ரயில் பெட் டித் தொழிற்சாலை துவக்க விழா ஒரு அரசியல் நாடகம் என ரயில்வேத்துறைக்கான முன்னாள் பொறுப்பு அமைச்சர் எம்.விஜயகுமார் திருவனந்தபுரத்தில் திங்கட் கிழமையன்று கூறினார். அந்தத் திட்டத்தை தனியார் மய மாக்குவதை திசைதிருப் பும் வகையில், இந்த நாட கம் நடந்துள்ளது எனக் குற்றம்சாட்டினார். பாலக்காட்டில் ரயில் பெட்டித் தொழிற்சாலை, அமைக்கும் கருத்துருவை ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, அதன் தரத்தை குறைத்து, பொதுத்துறை நிறுவனம் என்ற நிலையில் இருந்து தனியார் பங்கேற் கும் கூட்டு முயற்சி திட்ட மாக மாற்றியது. கேரளாவில் அமைக்கப் படும் தொழிற்சாலைக்கான முதல் கருத்துருவை ஏற்காத மத்திய அரசு, ரேபரேலி யிலும், கொல்கத்தாவிலும், பொதுத்துறை நிறுவனச் செயல்பாடாக மேற்கொண் டது. மாநில அரசின் வேண் டுகோளான திட்டத்தின் பங்குகளின் பங்களிப்பு என்கிற கருத்தும், மத்திய அரசின் காதுகளில் ஏறவில் லை என விஜயகுமார் கூறி னார். பாலக்காடு ரயில்பெட் டித் தொழிற்சாலைக்கான தனியார் பங்கேற்பாளர் களை அடையாளம் காண உலக டெண்டர்கள் விடாத நிலையில், பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா செவ் வாய்க்கிழமை நடந்துள்ளது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் தினேஷ் திரி வேதி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டுவிழா வுக்கு முதல்வர் உம்மன் சாண்டி அழைப்பு விடுக் காததால் விழாவில் பங்கேற் பது கேள்விக்குறியானது என எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறி னார். ரயில்பெட்டித் தொழிற் சாலை அடிக்கல் நாட்டு விழாவுக்கான அழைப் பிதழ் சமீபத்தில் ரயில்வே இளநிலை அதிகாரியால், ஒரு சம்பிரதாயமாக தரப் பட்டது. மரபுமுறை மீறப் பட்டுள்ளது என 87 வயது முதுபெரும் சிபிஎம் தலை வர் அச்சுதானந்தன் கூறினார். கேரளாவின் நீண்ட காலக் கோரிக்கை பாலக் காடு ரயில்பெட்டித் தொழிற்சாலை ஆகும். அச்சுதானந்தன் தலைமை யிலான, இடதுஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது. முழு பொதுத் துறையாக இல்லாமல் பொது – தனியார் பங்கேற் புடன் ரயில்பெட்டித் தொழிற்சாலை அமைப் பதை சிபிஎம் தலைவர் வி. எஸ்.அச்சுதானந்தன் கடுமையாக எதிர்த்தார்.

Leave A Reply

%d bloggers like this: