இஸ்லாமாபாத், பிப்.22- மொகஞ்சதாரோவை சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் அங்கு மேம்பாட்டு பணி களை மேற்கொள்ள ரூ.100 கோடியை பாகிஸ்தான் அரசு ஒதுக்கியுள்ளது. உலகின் மிகப் பழமையான நாகரிகத் தைக் கொண்ட மொகஞ்சதாரோ பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இது 12 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது சிந்து சம வெளியுடன் மொகஞ்சதாரோ இணைக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. மொகஞ்சதாரோவுக்கான தேசிய நிதி செயல்வாரியம், மொகஞ்சதாரோவில் உள்ள ஓய்வு இல்லத்தை சீரமைக்கவும், நிலப்பரப் பை அளவிடவும் முடிவு செய் துள்ளது என்று சிந்து கலாச்சார செயலர் ஆசிஸ் உகய்லி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: