புதுதில்லி, பிப்.22- 2012 ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் தகுதி போட்டிகளில் இந்தியா 3-0 என்ற கோல் களில் போலந்தை தோற்கடித் தது. தென் ஆப்ரிக்காவுடன் இத்தாலி 1-1 எனச் சமன் செய்துகொண்டது. மற்றொரு போட்டியில் உக்ரைன் 5-2 என கனடாவை வென்றது. ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணிகளும் ஒன்றை யொன்று ஆழம் பார்த்தன. 14ம் நிமிடத்தில் இந்திய வீராங் கனை ரீட்டு ராணி அணியின் முதல் கோலை அடித்தார். ஐந் தாம் நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை தீபிகா தாக்குர் தவறிவிட்டார். 13ம் நிமிடத்தில் போலந் தின் அடியை கோல்கீப்பர் யோகிதா பாலி தடுத்தார். உடனே இந்தியா தொடுத்த பதிலடி தாக்குதலில் பூனம் ராணியும், ரீட்டு ராணியும் பந்தை பகிர்ந்துகொண்டு முன் னேறினர். போலந்து அரைவட் டத்தின் உச்சியில் பூனம் தள் ளிய பந்தைப் பெற்ற ரீட்டு, போலந்து போல்கீப்பர் மார்ட் டாவை கடந்துசென்று கோல் போட்டார். 36ம் நிமிடத்தில் ராணி ராம் பால் இந்தியாவின் இரண்டா வது கோலை அடித்தார். போலந்தின் அரைவட்டத்துக் குள் ராணி ராம்பாலிடம் பந்து கிடைத்தது. மூன்று போலந்து வீரர்களைப் பந்தைக் கடைந்த படி கடந்த அவர் கோலுக்குள் பந்தைத் தள்ளிவிட்டார். இந் தியா 2-0 என முன்னிலை பெற்றது. 62ம் நிமிடத்தில் தீபி கா தள்ளிவிட்ட பந்தை பூனம் சிங் கோலுக்குள் அடித்தார். இந்தியா 3-0 என வென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.