ப.பாளையம், பிப். 22- நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மின் வெட்டைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் நூத னப் போராட்டம் நடை பெற்றது. தமிழக மக்களை கடுமை யாக வாட்டி வதைக்கும் வரலாறு காணாத மின் வெட்டை போக்க வலியு றுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செய லாளர் கே.மோகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்ட வர்கள் பலர் கையில் தீப் பந்தம் ஏந்தி மின்வெட் டினை கண்டித்து முழக் கமிட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தை சிஐடியு பொது தொழிலாளர் சங்க செயலாளர் காசிவிஸ்வநா தன், தையல் தொழிலாளர் சங்க தலைவர் அண்ணா துரை, விவசாய தொழிலா ளர்க சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் வி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். இதில் விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் உதவி தலைவர் எ.ஆர்.தங்கவேல், உதவி செயலாளர் கே. குமார் மற்றும் திரளான தொழிலாளர்கள் கையில் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: