கோபி, பிப். 22- மின்வாரியத்தில் காலி யாக உள்ள ஆறாயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐ டியு) கோபி வட்டக்கிளை யின் நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு கிளையின் தலை வர் என்.மாறன் தலைமை தாங்கினார். இதில் விலை வாசி உயர்வை கட்டுப்ப டுத்திட கோரியும், பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண் டித்தும் வருகிற பிப்.28ந் தேதியன்று நடைபெற யுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மின் வாரிய ஊழியர்கள் முழுமை யாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு, மின்வாரியத்தில் காலியாக உள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் எஸ்.ஏ.ராம தாஸ், பொருளாளர் எம். கிருஷ்ணன், வி.கிருஷ்ண மூர்த்தி, கே.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.