புதுச்சேரி, பிப். 22- மின்துறையை கார்ப்ப ரேஷனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சார்பில் புதுச்சேரி சட்ட மன்றம் முன்பு பேரணி -ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றி னால் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து விடு பட்டு மத்திய தொகுப்பிலி ருந்து வழங்கப்படும் மின்சா ரம், மானியத்துடன் கிடைப் பது கேள்விக்குறியாகும். மேலும் நீண்ட மணி நேரம் மின்தடையும் ஏற்படும். இலவச மின்சாரம் தடை பட்டு கட்டணம் அதிக ரிக்க வாய்ப்புள்ளது. எனவே புதுச்சேரி அரசின் மின் துறையை கார்ப்பரேஷனாக மாற்றக்கூடாது என வலி யுறுத்தி ஊழியர்கள், பொறி யாளர்கள் சார்பில் இப் போராட்டம் நடைபெற் றது. புதுச்சேரி மின்துறை எதிரில் இருந்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்ட மைப்பின் தலைவர் வேல் முருகன் தலைமையில் பேரணி யாக சட்டமன்றம் நோக்கிச் சென்றனர். பொதுசெய லாளர் ராமசாமி, பொருளா ளர் தணிகாசலம் சிஐடியு நிர்வாகிகள் நாராயணன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள், பொறி யாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அண்ணாசாலை, நேரு வீதியை கடந்து சட்டமன்றம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. பின்னர் மின் சாரத்துறைஅமைச்சர்தியாக ராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: