கோவை, பிப். 22- கோவை மாவட்டத்திலுள்ள கை, கால் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு அரசு சார்பில் இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு (கால் ஊனமுற்றோர் மற்றும் காது கேளாதோர்) இலவச ஆய்வுக்கூட தொழில் நுட்பப் பயிற்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டு கள் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. மேலும், பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படும். இதற்கு, பனிரெண் டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல், வேதியியல், தாவரவி யல் விலங்கியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 17 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். கைபேசி சரிபார்ப்பு பயிற்சி அதேபோல், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கைபேசி சரிபார்ப்பு பயிற் சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 மாதம் வழங்கப்படும். இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகையாக வழங்கப்படும். இவர்களுக்கான வயது வரம்பு 1.7.2011-ன் படி 18ல் இருந்து 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடைவர்கள், உடனடியாக தங்களது விண்ணப்பங்களை,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் என்ற முகவ ரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்க ளுக்கு, 0422 – 2380382 என்ற தொலைபேசி எண் ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஆகவே, மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் கேட்டுக் கொண்டுள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: