புதுதில்லி: பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தாலும் கூட, மறை முக வரி வசூல் 3.92 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதனன்று கூறினார். இந்த இலக்கை எட்டுவதில் மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரித்துறை யினர் அனைத்து முயற்சிகளும் மேற் கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். இத்துறையின் அதிகாரிகளுக்குக் குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இலக்கு எட்டப்படும் என்பதற்கான அறி குறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன,” என்றார்.

Leave A Reply