வெண்மணிநகர், நாகை, பிப்.22- மக்கள் நலனுக்காக போராடி உயிர் நீத்த ஜெ. நாவலன், சி.வேலுச்சாமி உள்ளிட்ட தியாகிகளுக் கும், கட்சித்தலைவர்கள், இயற்கைச் சீற்றங்களால் உயிரிழந்தோருக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநில மாநாட் டில் அஞ்சலி செலுத்தப் பட்டது. கட்சியின் மாநில மாநாட் டில் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்து மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசி னார். இந்திய நாட்டின் விடு தலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதிமூன்று ஆண்டுகள் வழி நடத்தியவரும், தனது இளம் பருவத்திலேயே சுதந் திரப் போராட்ட வேள்வி யில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வரும், சிறைவாசம், தலை மறைவு வாழ்க்கை, அடக்கு முறைகள் என்று சொல் லொண்ணாத் துன்பங் களைத் தாங்கிக் கொண்டு, தனது நீண்ட அரசியல் பய ணத்தை நிகழ்த்தியவருமான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்தியக் கம்யூ னிஸ்ட் இயக் கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரும் நீண்ட காலம் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப் பினராக செயல்பட்டவரும், மேற்குவங்க மாநில முன் னாள் முதல்வருமான தோழர் ஜோதிபாசு மறை விற்கும், இந்தியத் தொழி லாளி வர்க்கத்தின் முன் னணித் தலைவர்களில் ஒரு வரும், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ருமான எம்.கே.பாந்தே, கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய இ.பாலானந் தன், அரசியல் தலைமைக் குழுவின் முன் னாள் உறுப்பினர் பி. ராமச்சந்திரன் , முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் அகல்யாரங்கனேகர் ஆகி யோர் மறைவிற்கும் இம் மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான பாப்பா உமா நாத், சிஐடியு மாநிலச்செய லாளர்களில் ஒருவராகவும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தீக்கதிர் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றிய உ.ரா.வரத ராசன், நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலை தொழிற் சங்கத்தின் தவைராகவும், வேறுபல தொழிற்சங்கங் களின் தலைவராகவும் சிறப் பாக பணியாற்றிய சி. கோவிந்தராஜன், கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினராகவும், சிஐடியு மாநி லத் தலைவராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப் பாகப் பணியாற்றியவரும், குமரி மாவட்டத்திலும் மாநில அளவிலும் தொழிற் சங்கப் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றியவரு மான தோழர் ஹேமச்சந்தி ரன் மறைவிற்கும் மாநாடு அஞ்சலி செலுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினராகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாள ராகவும், மார்க்சிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட் டச்செயலாளராகவும், 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் நாடாளு மன்றஉறுப்பினராகவும்பணி யாற்றிய பொ.மோகன், ஒன்று பட்ட தென்னாற்காடு மாவட் டத்தில் கட்சியின் மாவட் டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப் பினராகவும் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய என்.ஆர்.ராமசாமி, கட்சி யின் மாநிலக்குழு அலுவல கத்தில் செயலாளராகவும் தீக்கதிர் நாளிதழின் மேலாள ராகவும் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்ட எஸ்.சேஷகிரி, கள்ளச்சாரா யத்திற்கு எதிரான போராட் டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நேரத்தில் 2011 ஜன வரி 19ம் தேதி சமூக விரோதி களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஜெ. நாவலன், கந்து வட்டி கொள்ளைக் கும்பலால் 2010 மார்ச் 10ம் தேதி படுகொலை செய்யப் பட்ட நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சி.வேலு சாமி ஆகியோருக்கும் மாநாட்டில் அஞ்சலி செலுத் தப்பட்டது. மேற்கு வங்கத்தில் கடந்த நான்காண்டுகளில் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், தலை சிறந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர், ஆய்வா ளர் கார்த்திகேசு சிவதம்பி, வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.எஸ். சர்மா ஆகியோ ரது மறைவிற்கும், மத தீவிர வாதம் மற்றும் பயங்கரவாத சக்திகளின் தாக்குதலுக் குள்ளாகி உயிர் நீத்த அனை வருக்கும், இலங்கை கடற் படையினரால் கொல்லப் பட்ட தமிழக மீனவர்களுக் கும், கடந்த நான்காண்டு களில் நாடு முழுவதும் உழைக் கும் மக்களின் பல்வேறு உரிமைப்போராட்டங்களின் போதும் ஜனநாயக உரிமை களுக்கான இயக்கங்களின் போதும் அடக்குமுறை களுக்கும், தாக்குதல்களுக் கும் இரையாகி உயிரிழந்த தியாகிகள் அனைவருக்கும் மாநாட்டில் அஞ்சலி செலுத் தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.