வெண்மணி நகர்,(நாகப்பட்டினம்),பிப்.22- பல்வேறு போராட்டப் பதிவுகளையும், வரலாறுக ளையும் தன்னகத்தே கொண் டுள்ள நாகப்பட்டி னத்தில் நூற்றுக்கணக்கான தோழர் களின் உற்சாக உழைப்பா லும் அர்ப்பணிப்பு மிக்க பணியினாலும் சிறப்பாக நடைபெறும்இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரையும் வரவேற்ப தாகவும், இரவு பகலாக பணியாற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரி விப்பதாகவும் வரவேற்புக் குழுத் தலைவரான கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து குறிப் பிட்டார். மாநாட்டின் வரவேற்புக் குழு சார்பில் அவர் ஆற்றிய வரவேற்புரை வருமாறு: நிலப்பிரபுத்துவக் கொடு மைகளுக்கு எதிராகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடுத லைக்காகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வும் செங்கொடி ஏந்தி களம் பல கண்ட வீரஞ்செறிந்த கீழத்தஞ்சையின் ஒரு பகுதி யான நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு நடைபெறுகிறது. தஞ்சாவூரில் நிலப்பிரபுத் துவத்தின் கொடூரமான அடக்குமுறைகள் எங்கும் கோலோச்சிக்கொண்டிருந்தன. அடிமைகளாக வைக்கப் பட்டிருந்த விவசாயத் தொழி லாளர்கள் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டனர். விவசாயத் தொழிலாளர் களை சாட்டையால் அடிப் பது, சாணிப்பாலை மனி தனை கட்டாயப்படுத்தி குடிக்கவைப்பதும் என்ற கொடூரமான தண்டனை முறை வழக்கில் இருந்தது. இவர்களை இக்கொடுமை களிலிருந்து விடுவிக்க கர்நாடகத்திலிருந்து பி.சீனி வாசராவ் இங்கு வந்து பண்ணை அடிமைகளை ஒன்று திரட்டி, தைரியம் ஊட்டி வளர்த்த மண்ணில் இந்த மாநாடு நடைபெறு வது மிகப்பொருத்தமான தாகும். சீனிவாசராவ் தலை மையில் பண்ணை அடிமைத் தனத்திற்கு முடிவு கட்டப் பட்டதும், நிலப்பிரபுத் துவக் கோட்டையை தவிடு பொடியாக்கியதும் செங் கொடி இயக்கத்தின் மகத் தான சாதனையாகும். இந்த வர்க்கப்போராட்டத்தில் செங்குருதி சிந்தியோர் இன்னுயிரை இழந்தோர் ஏராளம். அந்த மாபெரும் வீரர்களின் தியாகம் நம் நெஞ்சங்களில் என்றென் றும் நிலைத்து நிற்கும். திமுக ஆட்சியில் கீழ வெண்மணி சம்பவத்தில் 44 உயிர்கள், அதிமுக ஆட்சி யில் திருமெய்ஞானம் சம் பவத்தில் அஞ்சான், நாகூ ரான் களப்பலியானார்கள். ஆட்சிகள் மாறினாலும் செங்கொடி இயக்கத்தின் மீதான தாக்குதல் தொடர்ந் தது; தொடர்ந்து கொண்டி ருக்கிறது. பல்வேறு போராட் டப்பதிவுகளையும், வர லாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நாகப்பட்டி னத்தில் நூற்றுக்கணக்கான தோழர்களின் உற்சாக உழைப் பாலும் அர்ப்பணிப்பு மிக்க பணியினாலும் சிறப்பாக நடைபெறும் இம்மாநா ட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரையும் வரவேற் பதாகவும் இரவு பகலாகப் பணியாற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.