பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவிடம் மாற்றுப் பொருளாதாரக் கொள்கை ஏதுமில்லை. ஊழல் பிரச்ச னையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக்கும், பார திய ஜனதாவுக்கும் எந்த வேறு பாடும் இல்லை. கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி, சட்ட விரோத சுரங்க ஊழலில் சிக்கி பதவி விலகி விசாரணையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் தலைமையில் இருந்த ஆட்சிகள் மட்டுமே மேற்கு வங்கத்திலும், கேரளத் திலும், தற்போது ஆட்சியில் இருக்கும் திரிபுராவிலும் ஊழ லற்ற ஆட்சியை நடத்திக் காட் டியுள்ளன. எனவே மக்கள் மீது ஆட் சியாளர்களின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொள்கை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வும், ஊழல்களுக்கும், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திடம் சர ணாகதி அடையும் கொள்கை களுக்கும், மதவெறி அரசியலுக் கும் எதிராக போராட்டத்தை வலுப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சியை வலுப்படுத்த வேண் டும். இடதுசாரிகள் ஒற்று மையை வலுப்படுத்த வேண் டும். இதன் அடிப்படையில் இடது ஜனநாயக அணியைக் கட்ட வேண்டும். பிப்ரவரி 28ம் தேதி மத்தியத் தொழிற்சங்கங் கள் நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தம் அத்தகைய ஒரு நடவடிக்கையே. அதே போல் இதர பல்வேறு பகுதி உழைக்கும் வர்க்கங்களின் ஒற்றுமையை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண் டும். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இடதுசாரிகள் பலவீன மடைந்து விட்டதாகச் சிலர் நினைத்துக் கொண்டிருக்கி றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. அங்கு உழைக்கும் மக்களின் அடிப் படையான பிரச்சனைகளின் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் வலுவான போராட்டங்களை தலைமை ஏற்று நடத்து கின்றனர். பிப்ரவரி 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மேற்கு வங்க மாநில மாநாட்டுப் பேரணியில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இடது சாரிகள் மீது துவேஷம் கொண்ட பத்திரிகைகள் கூட, அந்த பேரணியில் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாக வேறு வழியில்லாமல் எழுதி யுள்ளன. இதுதான் மேற்கு வங்க மக்கள் சொல்லும் செய்தி. வரக்கூடிய நாட்களில் வலு வான இடது ஜனநாயக அணியை உருவாக்குவோம். இதற்காக தமிழகத்திலும் மார்க் சிஸ்ட் கட்சியை வலுப்படுத் துவது மிக முக்கியம். மாநாட்டு நிகழ்வுகள் வரக்கூடிய நாட் களில் தமிழகத்தில் மார்க் சிஸ்ட் கட்சி புதிய திசை வழி யில் முன்னேறுவதற்கு வழி காட்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி தமிழில் மொழி பெயர்த்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.