நாகை, பிப்.22- நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக பிப்ரவரி 28ம் தேதி மத்தியத் தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட் டத்தை மகத்தான வெற்றி பெறச்செய்வீர் என தமிழக தொழிலாளி வர்க்கத்திற்கு கட்சியின் அகில இந்திய பொதுச்செய லாளர் பிரகாஷ்காரத் அழைப்பு விடுத்தார். நாகை ஜோதிபாசு அரங்கில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது தமிழ்நாடு மாநில மாநாட் டைத் தொடக்கி வைத்து பிரகாஷ்காரத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 1940ம் ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுவாக உருவாக்கிய தளங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்தத் தருணத்தில் வெண்மணியில் உயிர் நீத்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 44 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நிலப்பிரபுத்துவ சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக கீழத்தஞ்சை மாவட்டத்தில் பி.சீனிவாசராவ் போன்ற மகத்தான தலைவர்களின் அளப்பரிய தியாகத்தாலும், போராட்டத்தாலும் செங்கொடி இன்று கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது சோசலிசம் முடிந்து விட்டது என்று சொன்னவர்கள். முதலாளித்துவமே எதிர்காலம் என்று கொக்கரித்தவர்கள் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்? ஒரு பக்கம் முதலாளித்துவ நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் போது, லத்தீன் அமெரிக்காவில் ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகளில் இடது சாரிக் கொள்கைகளை அமல்படுத்தும் அரசுகள் அமைந்து வருகின்றன. மக்கள் சீனம் விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே வரக்கூடிய நாட்களி லும் நிதி மூலதனத்தால் திணிக்கப்படும் தாராளமயக் கொள்கைகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கும். மக்கள் போராட்டங்கள் வலுப்பெறும். தேசிய அளவில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மறுபடியும் ஆட் சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறை வடையப் போகிறது. இக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வும், வரலாறு காணாத அளவுக்கு ஊழல்களும், விவசாய நெருக்கடியும் அதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலையும் மேலும் அதி கரித்து வருகிறது. ஏகாதிபத்தியத்துடன் மேலும் மேலும் நெருங்கிச் சென்று கேந்திரக் கூட்டாளியாக மாறும் அயல் துறைக் கொள்கையையும் இந்த அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியாளர்களின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், அதிலும் பெரும் பான்மையாக உள்ள அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் பாது காப்பதற்கான போராட்டத்தை நடத்து வது மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி களும் மட்டுமே. மார்க்சிஸ்ட் கட்சி, இடதுசாரிகளால் மட்டுமே ஆட்சியாளர் களின் கொள்கைகளுக்கு எதிராக மாற் றுக் கொள்கையை முன்வைக்க முடியும். (தொடர்ச்சி 3ம்பக்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.