தி.கோடு. பிப்.22- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அனைத்து தொழிற்சங்கத் தினர் சார்பாக வருகின்ற பிப்.28ந்தேதி நாடு முழுவ தும் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் என அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் பங் கேற்ற கூட்டங்களில் தீர் மானிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு -வேலூர் ரோடு வாலரைகேட் பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கத் தினர் பங்கேற்ற வேலை நிறுத்த விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏஐடி யுசி சங்கத்தின் நிர்வாகி எஸ்.மணிவேல் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி. சமூகபாதுகாப்பு நிதியம் ஏற்படுத்த வேண்டும். ஒப் பந்த தொழிலாளர் முறையை நீக்கிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். உள் நாட்டு தொழிலை பாது காத்திட வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட் டன. மேலும், இக்கோரிக் கைகளை வலியுறுத்தி வரு கின்ற 28 ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி கரமாக்குவோம் என தீர் மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐ டியு சார்பில் எஸ்.முத்து சாமி, எஸ்.சாந்தி, என். குமார், எஸ்.நடராஜ், ஐ.ரா யப்பன், ஏஐடியுசி சார்பில் பி.தனசேகரன், எஸ்.ஜெய ராமன், ஐஎன்டியுசி ஏ. கருப்பையா, ஆர்.குரு, எல்பிஎப் ச.பழனிசாமி. ஆர்.சுந்தரமூர்த்தி மற்றும் எச்எம்எஸ் எஸ்.ராம கிருஷ்ணன், ஏஐசிசிஐடியு எம்.ஆறுமுகம் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்கங்கள் இதேபோல், திருச் செங்கோடு அண்ணா சிலை முன்பு திங்களன்று பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பங்கேற்ற பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப் பாளர் எம். கணேஷ் பாண் டியன் தலைமை வகித்தார். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண் டும். பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை தனி யாருக்கு விற்பனை செய்தி டும் முடிவினை கைவிட வேண்டும். அனைவருக் கும் வேலைவாய்ப்பை உறுதிசெய்திடல் வேண் டும். புதிய பென்சன் திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிப்.28ந்தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனத்தின் பொரு ளாளர் கே.ராஜ்குமார், காப்பீட்டு ஊழியர் சங்கத் தின் செயலாளர் கே.முரு கேசன் ஆகியோர் விளக்க வுரை ஆற்றினர். இக்கூட்டத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத் தின் மாநில அமைப்பு செயலாளர் ஏ.முகம்மது ஜாபர், அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் கே.ஆர். கணேசன், சிஐடியு தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் எஸ்.கோவிந் தராஜ், அரசு ஊழியர் சங் கத்தின் ஏ.பாலன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.