நாமக்கல், பிப் 22- நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் அகில இந் திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மும் இணைந்து நடத்தும் லாரி தொழிலாளர் வாழ் வுரிமை மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. இந்திய நாடு முழுவதும் சுமார் 5 கோடிபேர் லாரி, பஸ், வேன், மேக்சிகேப், டேக்சி, ஆட்டோ மற்றும் டெம்போ என பல்வேறு வகைகளிலான மோட் டார் தொழிலில் ஈடுபட் டுள்ளனர். இத்தொழிலா ளர்களின் வாழ்வுரிமை மாநாடு மார்ச் 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந் திரா, கர்நாடகா, மகாராஷ் டிரா, கோவா, கேரளா மற் றும் பாண்டிச்சேரி உள் ளிட்ட பல்வேறு மாநிலங் களை சேர்ந்த தொழிலா ளர்கள் கலந்து கொள் கின்றனர். இம்மாநாட்டிற் கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட தலை வர் பி.சிங்காரம் தலைமை யில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சாலை போக் குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் எஸ்.மூர்த்தி, மாநில பொரு ளாளர் வி.குப்புசாமி, கேரள மாநில துணை தலை வர் கே.எ.அலிஅக்பர் மற் றும் சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எ. ரங்கசாமி வாழ்த்திப் பேசி னார். இந்த வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் 57 பேர் கொண்ட வரவேற் புக்குழு அமைக்கப்பட் டது. இதன் கௌரவ தலை வராக எ.ரங்கசாமி, வரவேற் புக்குழு தலைவராக பி. சிங்காரம், செயலாளராக ந.வேலுசாமி, பொருளா ளராக சி.மோகன் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செய லாளர் சி.மோகன் , கா.மு. காளியப்பன், விபி.கருணா நிதி, சிவசுப்ரமணி, மாதேஸ் வரன் மற்றும் மகேஸ்வ ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். —————

Leave A Reply

%d bloggers like this: