புதுதில்லி, பிப்.22- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரசின் வன்முறை அரசி யலுக்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டு கோள் விடுத்துள்ளது. அரசியல் தலைமைக்குழு விடுத் துள்ள அறிக்கை வருமாறு: பர்துவான் நகரின் தேவான்டிகி பகுதியில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கள் பிரதீப் தா, கமல் கயேம் ஆகிய இருவரையும் திரி ணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் படுகொலை செய் திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தோழர் பிரதீப் தா, சட்ட மன்றத்தில் பர்துவான் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதிப் படுத்திய முன்னாள் உறுப்பினர் மத்திய தொழிற்சங்கங்கள் வேண்டு கோள் விடுத்துள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலைக் கண்டித்து நடந்த ஊர்வலத்திற்கு இந்த இரண்டு தலைவர்களும் தலைமை தாங்கிச் சென்றபோது இந்த கொடூரமான கொலைகள் நடந்திருக்கின்றன. இக் கொலைகள் மிகவும் ஈனத்தனமானவை. மாநிலத் தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பதவிக்கு வந் ததைத் தொடர்ந்து இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் திட்டமிட்ட முறையில் தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்தத் தாக் குதல் நடந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந் துள்ள கொலைகளின் எண்ணிக்கை, இந்த இரு தலைவர் கள் கொல்லப்பட்டதோடு 58 ஆக உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி 19 அன்று பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி அறை கூவலை ஏற்று மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். வன்முறை அரசியலுக்கும், பழிவாங்கல் அரசியலுக்கும் எதிரான கோபத்தின் பிரதிபலிப்பாக அவ் வளவு பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டதன் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட் டுள்ளன. மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்ட ஆத்திரத்திலேயே திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் இந்தக் கொடூரச் செயலில் இறங்கியுள்ளனர். மத்திய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று வெற்றிகரமாக நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறை அரசியலையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து நாடுமுழுவதும் கட்சி அணிகளும் இதர இடதுசாரி, ஜனநாயக எண்ணம் கொண்ட மக்க ளும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அரசியல் தலைமைக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: