கோவை, பிப். 22- கோவையில் பஞ்சாலைத் தொழிலாளியை மில்லுக்குள் வைத்து அடியாட்களின் துணை யுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்த தனி யார் பஞ்சாலை உரிமையாளர் மீது மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவை அருகே உள்ள அரசூர் பொத்தியாம் பாளை யத்தில் கியூமேக்ஸ் என்ற பஞ் சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை சமயநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த எம்.லட்சுமணன் (29) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும். இந்த ஆலை வளாகத்திலேயே குடும்பத்துடன் வசித்து அவர் வருகிறார். இவர் அருகிலுள்ள திரிவேணி டெக்ஸ்டைலில் பிட்டராக பணிபுரியும் மதி வாணன் என்பவருடன் நட் பாகி உள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.12ம்தேதியன்று திரிவேணி ஆலையில் மதிவாணனை அடைத்து வைத்து மில் நிர் வாகத்தினர் மிரட்டியுள்ளனர். இதனை அறிந்த லட்சுமணன் அவரை நிர்வாகத்திடமிருந்து வெளியில் மீட்டு வந்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் திரிவேணி ஆலை யின் சூப்பர்வைசர் காளிதாஸ் மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரும், ஆலை முதலாளி லட்சுமணனுடன் பேச அழைப் பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற லட்சுமணனை, திரிவேணி ஆலை முதலாளி சக்தி வடி வேல், சூப்பர்வைசர் காளிதாஸ் மற்றும் அடியாட்களும் இணைந்து கடுமையாக தாக் கியுள்ளனர். அத்துடன் அவரை கத்திமுனையில் கடத்திவந்து கோவை சிங்காநல்லூரில் உள்ள சக்திவடிவேலின் மற் றொரு ஆலையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தியுள் ளனர். மேலும். மதிவாணன் 40 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அவனை எங்களிடம் ஒப் படைத்தால்தான் உன்னை வெளியே விடுவோம், இல்லை யென்றால் உன்னை குடும்பத் தோடு அழித்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். சிபிஎம் தலையீடு இந்தநிலையில் பஞ்சாலை தொழிலாளி லட்சுமணன் காயங்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியை அணுகியுள்ளார். இதனையடுத்து கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகரச் செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்டோர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் உமாவை நேரில் சந்தித்து பஞ்சாலை தொழி லாளி தாக்கப்பட்டது குறித்து புகார் மனு அளித்தனர். காவல் கண்காணிப்பாளரின் உத்தர வின் பேரில் பிப்.18ந் தேதி யன்று நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல்நிலைய போலீசார் மறு நாள் சூப்பர்வைசர் காளிதாஸை கைது செய்தனர். இதனிடையே ஆலை முதலாளி சக்திவடி வேல் தலைமறைவாகி விட்ட தால் அவரை தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். பஞ்சாலைத் தொழிலாளியை அடைத்து வைத்து சித்ரவதை செய்த தனியார் பஞ்சாலை முதலாளியின் கொடுஞ்செய லுக்கு சிஐடியு கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.

Leave A Reply

%d bloggers like this: