வெண்மணி நகர்(நாகை),பிப் 22- மேற்கு வங்கத்தில் திரிணா முல் கட்சி குண்டர்களால் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலை வர்கள் இருவர் படுகொலை செய் யப்பட்டதற்கு பலத்த கண்ட னத்தை ஜனநாயக இயக்கங்கள் தெரிவிக்க வேண்டும் என நாகை யில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: மேற்கு வங்க மாநிலம் பர்து வான் மாவட்டத்தில் வருகிற 28 ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தப்பேரணி விளக்கக்கூட் டத்தில் புகுந்த திரிணாமுல் காங் கிரஸ் கட்சியின் குண்டர்கள் கடும்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், சிஐடியு துணைச்செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரதிப்தா கொல்லப்பட்டுள் ளார். அவருடன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு தலைவருமான கமால் கயானும் கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலைகளுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு வன் மையான கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. இப்படு கொலைக்கு பலத்த கண்டனத் தைத் தெரிவிக்குமாறு மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: