பர்துவான், பிப்.22- மேற்கு வங்கத்தில் மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது திரிணாமுல் காங்கிர சார் தொடர்ச்சியாக நடத்தி வரும் படுகொலைத் தாக்கு தலில், புதனன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட இரண்டுபேர் வெட் டிக் கொல்லப்பட்டார்கள். பர்துவான் மாவட்டத்தில் வியாழனன்று கடை யடைப்புப் போராட்டத் திற்கு வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள் ளிட்ட கோரிக்கைகளுக் காக பிப்ரவரி 28 அன்று நாடுதழுவிய வேலைநிறுத் தப் போராட்டத்திற்கு மத் திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித் தும், தியோடிகி பகுதியில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் திரிணா முல் காங்கிரஸ் குண்டர் களால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் புதனன்று காலையில் பர்துவான் நக ரின் தேவான்டிகி பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென திரி ணாமுல் காங்கிரசார் ஊர் வலத்தினர் மீது கத்திகளா லும் உருட்டுக்கட்டைகளா லும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிர தீப் தா கொல்லப்பட்டார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கமல் கயேம் பலத்த காயங்களுடன் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிமன் பாசு, “ஞாயிறன்று பிரிகேட் பெரேட் மைதானத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணியில் மிகப் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டார்கள். அதைக் கண்டு திரிணாமுல் காங்கிரஸ் கலக்கம் அடைந் துள்ளது. அதைப் பொறுத் துக்கொள்ள முடியாதவர் களாகவே இந்தக் கொலைத் தாக்குதலை நடத்தியுள் ளனர்” என்று கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அமல் ஹதார், இது ஒரு திட்டமிட்ட கொலைதான் என்று குற்றம் சாட்டினார். மக்களிடமிருந்து திரிணா முல் காங்கிரஸ் தனிமைப் பட்டு வருகிறது. அந்த ஆத் திரத்தில்தான் இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இதைக் கண்டித்து மாநி லம் முழுவதும் ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்படும் என்று சிஐடியு சங்கம் அறிவித்துள் ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச் சார்யா, ஒரு அரசியல் ஊர் வலத்தில் இப்படித் தாக்கு தல் தொடுக்கப்பட்டதும், மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் கொல்லப்பட்டதும் வன்மையான கண்டனத் துக்கு உரிய செயல்கள் என்று கருத்துக் கூறியுள் ளார். பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தக் கொலைகளையும் தாக்கு தலையும் கண்டித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் தொடர்புள்ளவர்களாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்ப தாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். அந்த நான்கு பேரும் திரிணாமுல் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள் என்றும் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறினர். சம்பவம் குறித்து விசாரிக் கப்பட்டு வருவதாக மட்டும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கூறினார். இதனிடையே காவல் துறையினரின் விசாரணை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மறைமுகமாகக் கட் டளையிடும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றதாக மாநில சட்ட அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மோலோய் கட்டாக் அறிவித்திருக்கிறார். பர்துவான் மாவட்டத்தில் வியாழனன்று தாம் தங்கி யிருக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: