வெண்மணிநகர் ( நாகை)பிப்.22- தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத் துவோம் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். நாகையில் துவங்கிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு அவர் வாழ்த் துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த மாநாடு முழுவெற்றி பெற இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் முழுமனதோடு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜபாளையத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங் கினார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நான் வாழ்த்துரை வழங்குகிறேன். விருந்தாளியாக இந்த மாநாட்டில் நான் கலந்து கொள்ளவில்லை. பங்காளியாக கலந்து கொண்டுள்ளேன். நமது பாதைகள் இருவேறாக இருந் தாலும் ஒரே திசையை நோக் கித்தான் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் விரும்புவது,நினைப்பது ஒரே லட்சியத்தைத்தான். இன்று உலகம் முழுவதும் முதலாளித் துவத்திற்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இது அதற்கு முதல் முறையல்ல. அந்த நெருக்கடியை முதலா ளித்துவம் உழைக்கும் மக்கள் மீது திணிக் கிறது. வரி மற்றும் விலைகளை உயர்த்துகிறது. ஆட்குறைப்பு செய்து வேலை யில்லாமல் செய்து, தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது. கடந்த காலத் தில் முதலாளித் துவம் இந்த மூன்று வழிமுறை களைத்தான் கையாண்டது. அதனால் நாடுகளிடையே போர்களை உருவாக்குகிறது. வறுமையில் வாடுபவர்களுக் கும் ராணுவத்தள வாடங்களை வாங்க வைக்கும் வகையில் ஆதரவைப் பெருக்குகிறது. இரு தரப்பினருக்கும் ஆயுதங் களை ஏகாதிபத்தியம் விற்ப னை செய்கிறது. இப்படித் தான் முதலாம் உலகப்போர், இரண் டாம் உலகப்போர் ஆகிய வற்றை நடத்தி தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால், இப்போது அதனால் இந்த நடைமுறைகளைக் கையாள முடியவில்லை. தற்போது அமெரிக்கா மீள முடியாத பொருளாதார நெருக் கடியில் சிக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 31 ஆண்டு களாக சீனாவை சேரவிடாத அமெரிக்கா, தற்போது 34 டிரில்லியன் டாலர் சீனாவிடம் இருந்து கையேந்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. எந்த நாட்டையும் அமெரிக்கா வால் அடக்கி ஆளமுடிய வில்லை. அத்துடன் ஆயுதங் களையும் விற்கமுடியவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் உயர்ந்து விட் டதாக பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர் ப.சிதம் பரமும் கூறிவருகின்றனர். வளர்ச்சி வேகம் கடந்த 3 ஆண் டுகளாக குறைந்து வருகிறது. உலகத்தின் பாதிப்பு தம்மை பாதிப்பதாக பிரதமர் இப் போது பேசுகிறார். விவசாயி கள் தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தி யாவில் பணம் அதிகம் புழங் கும் மாநிலமான மும்பையில் உள்ள விதர்பாவில் ஒண்ணே முக்கால் லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.செம்மொழி பேசும் தமிழ்நாட்டிலும் பட்டினிச் சாவுகள் நடைபெறுகின்றன. விவசாயிகளுக்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கு கட்டுப் படியான விலை கிடைக்க வில்லை. கடன் தத்தளிப்பால் இந்த தற்கொலைகள் நடை பெறுகிறது. விவசாயம், தொழிற் துறை மீட்கப்பட வேண்டும் என்றால், மத்தியில் உள்ள காங் கிரஸ்-திமுக அரசு தோற்கடிக் கப்பட வேண்டும். தமிழகத் தில் தொழில் வளர்ச்சி என்பது 5 நகரங்களைச் சுற்றித்தான் நடக் கிறது. தமிழகத்தில் 25 மாவட் டங்களில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை; பணப் புழக்கம் இல்லை; வேலை வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் பிறநாட்டு முதலீடு 60 சத வீதமாகும். 1890 பிறநாட்டு தொழிற்சாலைகள் தமிழகத் தில் இயங்குகின்றன. இந்த கம்பெனிகளை திமுக, அதிமுக அரசுகள்தான் அழைத்து வந் தன. இந்த அரசுகள் செய்த ஒப் பந்தத்தில், தடையில்லா மின் சாரம்,தடையில்லா குடிநீர் மாநிலத்தின் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமி ழகம் மின்நெருக்கடியால் சிக் கித்தவிக்கிறது. மின்சாரத்தை நம்பி யாரும் கூட்டங்களில் பேச முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. தமிழகத்தில் இன்று 41 சதவீத மின்சாரம் அந்நிய நாட்டுக்கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு 4 லட்சம் கார் உற்பத்தி செய் வோம் என ஹூண்டாய் கார் கம்பெனி அறிவிக்கிறது. தமி ழகத்தில் தமிழனுக்கு மின் வெட்டு உண்டு. அயல்நாட் டுக்காரனுக்கு இல்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண் டும். தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்து வோம். மக்கள் பிரச்சனைகளுக் காக ஒன்றுபட்டு போராடு வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: