சென்னை, பிப். 22- டாலர் மதிப்பு, பங்குச் சந்தை ஆகியவற்றில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தால் தங்கம் விலையும் உயர்ந்து, சரிந்து வந் தது. இந்நிலையில் புதனன்று (பிப். 22) டாலர் மதிப்பு உயர்ந்ததால் தங்கம் விலையும் திடீரென உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2,664க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 312க்கும் விற்கப்பட்டது. இது செவ்வாயன்று விற்பனையான விலையை விட பவுனுக்கு ரூ. 200 அதிகம். செவ்வாயன்று (பிப். 21) ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 2,639 இருந்தது. தங்கத்தைப் போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. புதனன்று (பிப். 22) வெள்ளி விலை 10 கிராமிற்கு ரூ. 9 உயர்ந்து ரூ.624க்கு விற்றது. செவ்வாயன்று (பிப். 21) 10 கிராம் வெள்ளி விலை ரூ. 615 இருந்தது..

Leave A Reply