புதுதில்லி, பிப்.22- மக்களின் கடும் எதிர்ப் பைக் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் விலைவாசியை மேலும் அதிகரிப்பதற்கே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு திட்டமிட்டிருக்கிறது. பிரதமரின் பொருளா தார ஆலோசனைக் குழு (பிஎம்இஏசி) புதனன்று (பிப்.22) அளித்துள்ள அறிக் கையில், டீசல் விலையை யும் உலகச் சந்தை நிலவரத் தோடு இணைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது. ஆயத் தீர்வையையும் சேவை வரி களையும் நெருக்கடிக்கு முந் தைய 12 விழுக்காடு அள வுக்கு உயர்த்த வேண்டும் என்றும் அந்தக் குழு ஆலோ சனை கூறியுள்ளது. 2011-12ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக் கையை புதுதில்லியில் வெளி யிட்ட பிஎம்இஏசி தலைவர் சி.ரங்கராஜன், யூரியாவுக் கான விலைக்கட்டுப்பாட் டையும் அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார். நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி அள வில் எதிர்பார்க்கப்பட்ட 4.6 விழுக்காடு என்ற அளவை யும் மீறிச் செல்லும் என்று தெரிகிறது. ஆகவே மானி யங்களைக் குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்றார் அவர். 2012-13ல் படிப்படியாக டீசல் விலை கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது அவசி யம். ஒரு அளவுக்கு மேல் இதற்கு மானியம் வழங்கு வது சாத்தியம் இல்லை என் றும் அவர் கூறினார். டீசல் விலை 2011 ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அதை ஓரளவு ஈடுகட்ட ஆயத்தீர்வையையும் சுங்க வரியையும் மத்திய அரசு சிறிது குறைத்தது. அதைத் தான் மீண்டும் பழைய நிலைக்கே மாற்ற பிஎம் இஏசி பரிந்துரை செய்துள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

%d bloggers like this: