சேலம், பிப். 22- சேலம் மாவட்டத்தில் தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெப் நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் யுனிசெப் அமைப்பின் அதிகாரி சுகாதாராய் கலந்து கொண்டு பேசியதாவது. இந்தியாவில் 40 சதவிகிதத்தினருக்கு குழந்தை பருவத் திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணங் கள் அதிகளவில் நடைபெறுகின்றன . கடந்த 2007-08ம் ஆண்டில் மட்டும் 42.9 சதவிகிதம் அளவிற்கு சேலத்தில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இவற்றில் 18 வய துக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்திடும் போது, அவர்களின் பிரசவ காலத்தில் 5 சதவிகித குழந் தைகள் பிறக்கும் போதே இறந்து விடுகின்றன. மேலும் வளர் இளம் பெண்களில் 23 சதவிகிதம் பேருக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. இதேபோல் பெண் களின் கல்வி நிலையும் மோசமாக உள்ளது. பள்ளி செல் லும் பெண்களில் நூற்றுக்கு மூப்பது சதவிகித பெண் கள் மட்டுமே பள்ளி இறுதி படிப்பை நிறைவு செய்கின்றார்கள், இதில் பத்துபேர் மட்டுமே கல்லூரி படிப்புக்கு செல்கின்றனர். 2011ம் புள்ளி விபரப்படி 1000ம் ஆண்களுக்கு 917 பெண்கள் மட்டுமே உள்ளனர். எனவே தமிழக அரசு பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் நடைபெறுவதையும், பெண்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்வதில் உள்ள தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை எடுத்துரைக்க அரசு முன்வர வேண் டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.