வெண்மணிநகர்(நாகை),பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட் டினத்தில் பேரெழுச்சி யுடன் புதனன்று துவங்கி யது. உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் முதல் நிகழ் வான ஜோதி பெறும் நிகழ்ச்சி அபிராமி திரை யரங்கு அருகில் நடைபெற் றது. இசைநிகழ்வோடு துவங்கிய மாநாடு வங்கி ஊழியர் அமைப்பின் பீட் சேர்ந்திசைக்குழுவின் இசைநிகழ்வுடன் மாநாடு இனிதே துவங்கியது. இராஜ ராஜேஸ்வரியின் ஒருங் கிணைப்பில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் தியாகி மணவாளன் எழுதிய “விடு தலைப்போரில் வீழ்ந்த மலரே“ என்ற பாடல் இசைக்கப்பட்ட போது நிலவிய அசாத்தியமௌ னம் பெரும் நெகிழ்வை ஏற் படுத்தியது. இராஜராஜேஸ் வரிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பொன் னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். கொடி, ஜோதிக்கு வர வேற்பு மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக் கொடியைக் குழுத்தலைவர் என்.நன் மாறனிடமிருந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார். வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகள் நாங்கள் என உலகிற்கு எடுத் துக்காட்டிய வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை குழுத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.தம்புசாமி யிடமிருந்து மாநிலக்குழு உறுப்பினர் கோ.வீரய்யன் பெற்றுக்கொண்டார். பஞ் சாலைத் தொழிலாளர்களுக் கானப் போராட்டத்திற்காக தூக்குமேடை ஏறிய சின்னி யம்பாளையம் தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.பத்ம நாபனிடமிருந்து, சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சி யின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவருமான என். சங்கரய்யா பெற்றுக்கொண் டார். 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 22 பேர் சுட்டுக் கொலை செய்யப் பட்ட வீரத்தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தனிடமிருந்து முதுபெரும் தலைவர் ஏ. அப்துல்வஹாப் பெற்றுக் கொண்டார். மாநாட்டுக் கொடியை எழுச்சிமிகு முழக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முது பெரும் தலைவரும், மத்தி யக்குழு உறுப்பினருமான ஆர்.உமாநாத் ஏற்றிவைத் தார். தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதி களை ஏ.வி.முருகய்யன், வி.மாரிமுத்து, நாகைமாலி எம்.எல்.ஏ ஆகியோர் மாநாடு நடைபெறும் தோழர் ஜோதிபாசு அரங் கிற்கு எடுத்து வந்தனர். பொதுமாநாடு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சி யின் அகில இந்தியத்தலை வர்களும், மாநிலத்தலைவர் களும், மாநாட்டுப்பிரதிநிதி களும் மலரஞ்சலி செலுத் தினர். அதன்பின் பொது மாநாடு துவங்கியது. இம்மாநாட்டிற்கு பெ.சண்முகம்,கே.காமராஜ், மூசா,எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.வேல்முருகன் ஆகி யோர் தலைமைக்குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் அஞ்சலி தீர்மானத் தை வாசித்தார். மக்களுக் கான போராட்டத்தில் தன்னை ஈந்து கட்சியைக் காத்த மாவீரர்களுக்கும், காலமான முதுபெரும் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டின் வரவேற் புக்குழுத் தலைவர் வி.மாரி முத்து வரவேற்புரையாற்றி னார். கட்சியின் அகில இந் தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் மாநாட்டி னைத் துவக்கி வைத்து சிறப் புரையாற்றினார். அவரு டைய ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமி ழில் மொழியாக்கம் செய் தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செய லாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். பிரதிநிதிகள் மாநாடு பொதுமாநாட்டினைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. கட்சி யின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக் கையைச் சமர்ப்பித்தார். இதன் பின் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இம் மாநாட்டில் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் எஸ்.ராமச்சந் திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., ஏ.கே.பத்ம நாபன், சுதாசுந்தரராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து பிப்ர வரி 25ம் தேதி வரை நடை பெறுகிறது.

Leave A Reply