சங்கரன்கோவில், பிப். 22- சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதனன்று (பிப். 22) காலை தொடங்கியது. தேர்தல் மன்னன் பத்மராஜன், மகாத்மா காந்தி சேவா மையம் வேட் பாளர் ஆறுமுகம் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்த னர். அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி நாளை மனு தாக்கல் செய்கிறார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முத்துசெல்வி (அதிமுக), ஜவகர் சூரியகுமார் (திமுக), முத்துக்குமார் (தேமுதிக), டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதனன்று (பிப். 22) காலை 11 மணிக்கு துவங் கியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் செல்வராஜிடம் தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் 128வது முறையாக தேர்தலில் களமிறங்குகிறார். மகாத்மா காந்தி சேவா மையம் சார்பில் பூரண மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தும் வகையில் போட்டியிடும் ஆறுமுகம், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாமோதரனிடம் மனுதாக்கல் செய்தார். முத்துலட்சுமி (அதிமுக) நாளையும், ஜவகர் சூரிய குமார் (திமுக) 27ம் தேதியும், டாக்டர் சதன் திருமலைக் குமார் (மதிமுக) 24ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய் கின்றனர். 29ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படு கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.