பெங்களூர்: நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான நிறுவனத்திற்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூடுதல் கடன் தரு வதை ரிசர்வ் வங்கி எதிர்க்கவில்லை என, அதன் துணை கவர்னர் கே.சி.சக்ரவர்த்தி புதன்கிழமை கூறினார். கிங்பிஷர் விமான நிறுவனம் ரூ.7 ஆயி ரத்து 57 கோடி கடனில் தவிக்கிறது. எனவே பணி முதலீடு தொகை ரூ.200 – ரூ.300 கோடி அளிக்க வேண்டும் என ஸ்டேட் பேங்க் தலைமையிலான கடன் வங்கி அமைப்புக்கு கிங்பிஷர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிங்பிஷர் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பாங்க் கூடுதல் கடன் தருவதை ரிசர்வ் வங்கி எதிர்க்கவில்லை. வங்கிகள் வர்த்தக உரிமைகளைக் கொண்டது. ஒரு தொழில் பிரிவு மீண்டும் தழைத்தோங்கும் என கரு தினால் அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். வங்கிகள் அபாயங்களை எதிர் கொள்ளும் தனித்துவ அமைப்புகள் என, சக்ரவர்த்தி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: