ஜம்மு, பிப்.22 – ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் ரம்பான் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளால் ஜம் முவில் இருந்து காஷ்மீர் செல் லும் 300கி.மீ. நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது. ரம்பான் மாவட்டத்தில் நெடுஞ்சாலை செல்லும் வழி யில் மூன்று மண்சரிவுகள் ஏற் பட்டதால் வாகனப்போக்கு வரத்து நிறுத்தப்பட்டு நெடுஞ் சாலை மூடப்பட்டது. இதன் விளைவாக சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு புறமும் நிற்கின்றன. கூனி நல்லா, ஹிக்னி, பந்தல் பகுதிகளில் செவ்வா யன்று இரவு பெய்த கனமழை யால் மண்சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் கற்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் எல்லைக்காவல் அமைப்பு ஊழியர்கள் முடுக்கி விடப்பட் டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: