கோவை, பிப். 22- கோவை மாநகராட் சியின் குடிசைப் பகுதிக ளில் மனிதக்கழிவுகளை திறந்த வெளியில் கழிக்கும் நிலையை மாற்றி கழிப்பி டத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி புதனன்று நடை பெற்றது. கோவை மாநகராட்சி யின் குடிசைப் பகுதிகளில் உள்ள கழிப்பிடத்தை பயன் படுத்தாமல் திறந்தவெளி யில் மனித்கழிவுகளை கழிப்பதால் வயிற்றுப் போக்கு, சீதபேதி, டைபாய்டு, வாந்திபேதி, இரத்தசோகை, காலரா, மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய் கள் பரவுகிறது. ஆகவே, பொதுமக்கள் ஏற்கனவே உள்ள பொதுக்கழிப்பி டம் மற்றும் புதிதாக கட் டப்பட்டு வரும் கழிப் பிடங்களை பயன்படுத்து வது குறித்த விழிப்புண ர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாநகர மேயர் செ.ம. வேலுச்சாமி துவக்கி வைத் தார். இப்பேரணியில் கோயம் புத்தூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர். இவர்கள், வடகோவை மாநகராட்சி பள்ளியிலி ருந்து, விழிப்புணர்வு தட் டிகள் மற்றும் பேனர்களை ஏந்திக் கொண்டு பேரணி யாகச் சென்றனர். அப்போது, திறந்த வெளியில் மனிதக்கழிவு களை கழிப்பதை விட கழிப்பிடங்களை பயன் படுத்துவதே சிறந்தது என்பதனை மாணவர்கள் வலியுறுத்தினர். இதில், மாநகராட்சி ஆணையாளர் தி.க.பொன் னுசாமி, சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., மத்திய மண் டல தலைவர் ஏ.ஆதிநாரா யணன், கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெய ராம் மற்றும் வார்டு உறுப் பினர், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: