“சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டும் சிந்தை இரங்காரடீ! – கிளியே! செம்மை மறந்தாரடீ! பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தம் கண்ணால் கண்டும் – கிளியே! சோம்பிக் கிடப்பாரடீ!” ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடி மை இந்தியாவில் மகாகவி பாரதி பாடிய தை, விடுதலை பெற்று அறுபது ஆண்டு களுக்கு மேலான பின்பு நாமும் பாடலாம் என்கிற நிலையை என்னவென்று சொல் வது? சுதந்திரம் பெற்றால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் மக்கள் எல்லாம் சுபிட்சமாக சுகமாக வாழ்வார்கள் என்றும் சொன்னதெல்லாம் பொய்யாய்ப் பழங் கனவாய்ப்போய்விட்டது. லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாக மகா கோடீஸ்வரர்களாக பில்லியனர் களாக மாறியிருக்கிறார்கள். இரவு உணவு சாப்பிடாமல் உறங்கச் செல்பவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்காகிய அவலம் நிகழ்ந் திருக்கிறது. அம்பானிகளின் சொத்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அப்பிராணி மக் களால் ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய் கூட செலவழிக்க முடியாத சோகத்தை என்னவென்பது? நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2020ல் வல்லரசாகும் என்றெல்லாம் ஆட் சியாளர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார் கள். ஆனால் நாட்டில் பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உணவை உற்பத்தி செய்கிற விவசாயி தன் கடன் சுமையால் உயிரை மாய்த்துக் கொள் கிறான். விவசாய நாடான இந்தியாவில் ஆளும் அரசுகள் விவசாயிகளுக்கு உதவும் கொள்கையைக் கடைப்பிடிக் காமல், அவர்களை மேலும் மேலும் படு குழியில், பாதாளத்தில் தள்ளிக் கொண்டி ருக்கின்றன. விவசாயத்துக்கான மானியத்தை குறைத்துக் கொண்டேயிருக்கிறது மத்திய அரசு. ஆனால் விமானக் கம்பெனிக்காரர் களுக்கு அரசு கஜானாவை திறந்து அள்ளித் தரத் துடிக்கிறது. உணவு உற் பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்ந்த மேற்கு வங்கத்தில் கூட தற் போது விவசாயிகள் தற்கொலை செய்வது துவங்கிவிட்டது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார் களே. அது உண்மை தான் போலும். இப்போது உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்போகிறோம் என்று கதைக்கிறார்கள். அது என்ன செய்யப் போகிறது? தற்போது மக்களுக்கு உணவு தானியங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. அதை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக் கலாமா? என்றும் உணவுப் பொருட்களுக் கான மானியத் தொகையை மக்களிடம் நேரடியாகக் கொடுத்துவிடலாமா என்றும் யோசிக்கிறார்களாம்? பொருட்களே மக்கள் கையில் முழு தாகப் போய்ச் சேருவதில்லை. இதில் பணமாகக் கொடுக்கலாம் என்றால் அதன் நிலைமை என்னவாகும்? ஒரு ரூபாய் மக்களுக்குச்சேர வேண்டும் என ஒரு திட்டம் போட்டால், அதில் வெறும் 26 பைசாதான் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே நடைமுறையாக உள்ளதாகக் கூறுவார்கள். இதுதான் நமது அரசுகள் திட்டத்தைச் செயல்படுத்தும் லட்சணம். இந்நிலையில் பணமே பிரதானம் என் றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். பொது விநியோக முறையைப் பலப் படுத்தினால் உணவுப் பொருட்கள் மக் களைச் சென்றடைய வழிபிறக்கும். ஆனால் இப்போதிருக்கும் முறையையும் ஒழித்துக்கட்ட யோசித்தால் என்ன வாகும்? உணவுப் பொருட்கள் நமது கிட்டங் கிகளில் போதும் போதும் என்னும் அள வுக்கு இருப்பு உள்ளன. ஆனால் அதை மக்களுக்கு வழங்குவதற்குத்தான் மனம் இல்லை ஆட்சியாளர்களுக்கு. கிட்டங்கி களில் எலிகள் தின்னும், மக்கிப்போகும், வீணாகிப் போகும் உணவு தானியங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கலாமே என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் கூட, ஆட்சியாளர்களின் மனநிலையில் மாற்றம் இல்லை. இதுதான் ராஜநீதி. சும்மா கிடந்து வீணாகப் போனாலும் போகலாம்; மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதம் காட்டுவது தான் ராஜதந்திரம், சாணக்கிய சாஸ்திரம். ஆனால் ஏழை,எளிய மக்கள் வீடுகளு க்குச் சென்று தங்குவது, உணவு உண்பது என்று ஏமாற்று வேஷம் போடுகிறார்கள். இப்போது ராகுல் காந்தி செய்வதை முன்பு அவரது தந்தை ராஜீவ் காந்தியும் செய்தார். அவரது பாட்டி இந்திரா காந்தி கூட வறுமையே வெளியேறு (கரீபி ஹட்டோ) என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டார். ஆனால் மக்கள்தான் நம்பவில்லை என் பதை காங்கிரஸ்காரர்கள் மறந்து விடு கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, பாரதிய ஜனதாக்காரர்களும் அப்படியே இருக் கிறார்கள். ஒருவருக்கொருவர் இளைத் தவர்களல்ல, சளைத்தவர்களல்ல என் பதில் பெரும் போட்டி அவர்களுக்குள் நிகழ்கிறது. இதுதவிர உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து செயற்கையாகத் தட்டுப் பாட்டை, பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையை உயர்த்துவது, கொள்ளை லாபவெறி பதுக்கல்காரர்களின் பஞ்ச மாபாதகச் செயல். அந்தப் பதுக்கல் பேர் வழிகளிடமிருந்து உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்வது நல்ல அரசின் கடமை கூட அல்ல, அரசின் சாதாரண நடவடிக்கை. அது அன்றாடக் காரியங்களைக் கவனிக் கும் அரசின் நடைமுறை. அதைச் செய் தாலே பெரும்பகுதி பற்றாக்குறை தீர்ந்து விடும். ஆனால் அரசோ பதுக்கல் காரர்களின் பாதுகாவலனாக அல்லவோ திகழ்கிறது. கள்ளச்சந்தைக்காரர்கள், பதுக்கல் காரர்களிடமிருந்து உணவுப் பொருட் களை பறிமுதல் செய்ய கம்யூனிஸ்ட் டுகளால் மட்டும்தான் முடியும். அத் தகைய காரியத்தில் சுதந்திரத்துக்கு முன்பே 1945-46 காலகட்டத்தில் தமி ழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் பாலதண்டா யுதம் போன்ற தலைவர்கள் முயற்சியால் பெரும்பகுதி உணவுப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு, அரசால் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்திலும் அத்தகைய காரியத்தில் பி.ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் ஈடுபட்டனர். அப்போது தான் மதுரைச் சதிவழக்கு வெள்ளைய ராட்சியால் தொடுக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தவிடுபொடியானது. சுதந் திரத்துக்கு முதல் நாள் தான் அந்தத் தலைவர்கள் சிறையிலிருந்து விடு தலையானார்கள். அந்த முன்னுதாரணம் நமக்கு மட்டு மே உண்டு என்பதாலும், நாம் மட்டுமே வறிய மக்கள், ஏழை, எளிய மக்கள் பால் அக்கறை கொண்டவர்கள் என்பதாலும் இப்போதும் அத்தகைய காரியத்தில் நம்மால் ஈடுபடமுடியும். விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தமிழக ஆட்சியா ளர்கள் உணவுப் பொருள், குறிப்பாக அரிசிப் பஞ்சம் ஏற்பட்டபோது எலிக்கறி சாப்பிடச் சொன்னதும், கப்பைக்கிழங்கு சாப்பிடச் சொன்னதும், அவர்களுக்கு நேர்ந்த கதியும் தெரிந்த விஷயங்கள் தான். அதன் விளைவு தான் பிற்காலத்தில் ரேசனில் 2 ரூபாய் அரிசி, ஒரு ரூபாய் அரிசி வழங்கியது. இலவச அரிசி என்று தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் உள்ளது போல இந்தியா முழுவதும் குறைந்தவிலையில் அரிசி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. நாடாளு மன்றத்தில் கூட வேண்டுகோள் விடுத் தது. எனவே உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதும் அத்தி யாவசியப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குவதும் மிகவும் அவசிய மானதாகும். தமிழ் இலக்கியத்தில் அமுதசுரபி வைத்து பசிப்பிணியாற்றிய ஆபுத்திரன், மணிமேகலை இன்னும் நமக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றது மணிமேகலை காப்பியம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி னேன் என்று இரங்கிய இராமலிங்க வள்ளலார் அணையாத அடுப்புடன் அன்ன சத்திரங்களை ஏற்படுத்தி பசிப் பிணி போக்கினார். “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம்” என்றார் பாரதி. அவர்களின் வாரிசுகளாக மனித நேயத்தின் சின்ன மாகத் திகழ்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் தான் என்று நம்மால் மார்தட்டிச் சொல்ல முடியும்

Leave a Reply

You must be logged in to post a comment.