புதுதில்லி, பிப்.22- இஸ்ரேல் தூதரக கார் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. கார் மீது தாக்குதல் நடந்த நேரத்தில் சிகப்பு நிற மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாகக் கூறப் படும் நபரைப் பிடிக்க எடுக் கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த தாக்குதலுக்கு கறுப்பு நிற வாகனம் பயன்படுத்தப் பட்டதாக சில தகவல்கள் குறிப்பிடும் நிலையில் சிவப்பு நிற மோட்டார்சைக்கிள்தான் இந்த சம்பவத்தில் பயன்படுத் தப்பட்டது என்பதில் தில்லி போலீசார் உறுதியாக உள் ளனர். தில்லி போலீசாரும், இஸ் ரேல் அதிகாரிகளும் இந்த சம் பவம் தொடர் பாக 2 முறைக்கு மேல் ஆய்வுசெய்தும் விசார ணையில் எந்தவித முன்னேற் றமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஏராள மான சிகப்பு வண்ண மோட்டார்சைக் கிள்களை பறி முதல் செய்து தில்லி போலீ சார் விசாரணை நடத்தினர். ஆனால் அவைகள் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில்லாததால் பின்னர் விடுவிக்கப்பட்டன.

Leave A Reply