கோவை,பிப்.22- வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு தமிழ் நாடு அரசு சாலைப்போக்குவரத்து நிறுவனம் சார் பில் இலகு ரக மற்றும் கனரக ஓட்டுனர் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை தரமணி சாலைப்போக்குவரத்து நிறுவனத்திலும், திருச்சி சாலைப்போக்குவரத்து நிறுவ னத்தின் ஒட்டுனர் பயிற்சி பள்ளியிலும் நடக்கிறது. கனரக வாகன ஒட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் இன்று (பிப்.23) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்வர், தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சி நிறுவனம், பொள்ளாச்சி என்ற முக வரியில் நடக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரு.1லட் சத்துக்கு மிகாமலும், 1-1-2012 அன்று 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மற்றும் பார் சீய மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இப்பயிற்சி யில் சேர்ந்து பயன்பெறலாம்.

Leave A Reply

%d bloggers like this: