திருப்பூர்.பிப்.22- திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் ‘இலக்கை நோக்கிய இளைய தலை முறை’ என்ற மாதாந்திர வகுப்புகள் துவங்கப்பட் டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலம் பாளையம் நகரக்குழு சார் பில் இளைஞர்களுக்கான மாதாந்திர வகுப்புகள் நடத்திட முடிவு செய்யப் பட்டு, “இலக்கை நோக்கிய இளைய தலைமுறை’’ என் னும் பெயரில் ஞாயிறன்று துவக்க விழா நடைபெற் றது. திருப்பூர், வேலம் பாளையம் நகரத்துக்குட் பட்ட பி.டி.ஆர் நகரில் ரம் மியமான சூழலில் நடை பெற்ற துவக்க நிகழ்ச்சி யின் முதல் வகுப்பினை வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், இளைஞர் முழக்கம் இத ழின் ஆசிரியருமான இல. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு கருத்துரை வழங் கினார். இதில் பள்ளிப் பாடம் புரியவில்லை என்பதிலி ருந்து சமூகத்தில் நடக்கும் அவலங்கள் வரை இளை ஞர்களாகிய நாம் கேள்வி கேட்க வேண்டும். ஊழல், சுகாதாரக்கேடு, மின்தடை, தண்ணீர் வியாபாரமாவது என அனைத்து பிரச்சனை கள் குறித்தும் கேள்வி களை எழுப்பிட வேண் டும். நாம் உரிய நேரத்தில் கேட்காத கேள்விகளி னால், அடுத்தடுத்த தலை முறைகள் பாதிப்படை கின்றன என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு வாலி பர் சங்கத்தின் நகரத்தலை வர் அ.மணவாளன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நகர செய லாளர் இ.ரகுக்குமார், ரத்த தான முன்னாள் கழகச் செயலாளார் த. நாகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் நக ரச்செயலாளர் கே.ரங்க ராஜ் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: