இஸ்லாமாபாத், பிப். 22- மக்களவை சபாநாயகர் மீராகுமார், பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச் சர்கள் கூடியிருந்த கூட்டத் தில் சரளமாக உருது மொழி யில் பேசினார். அப்போது அவரது உரையில் பிரக் கோர்க்புரி, மஜுரு சுல்தான் புரி மற்றும் பயஸ் அகமது கவிதை வரிகள் இடம்பெற்று இருந்தன. பாகிஸ்தான் மக்களவை சபாநாயகர் பெமிதா மிர்சா ஏற்பாடு செய்த இரவு விருந்து நிகழ்ச்சியின்போது மீராகுமாரின், உருது உரை யை பலரும், திரும்ப திரும்ப கைத்தட்டி வரவேற்றனர். பாகிஸ்தானின் இயற்கை அழகை மீராகுமார் புகழ்ந் தார். இருநாட்டு மக்கள் இடையே நல்லுறவு மேம் பட, இருதரப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களும் பாடுபடுவதாக அவர் தெரி வித்தார். பொது கலாச்சாரம் மற் றும் இணைப்புகளை கொண்ட அடிப்படையில் இருநாடு களின் உறவு அடிப்படை உள்ளது. நமது நட்புறவு மிக சீரிய வேகத்தில் செல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு என்று மீராகுமார் தனது உரையில் வலியுறுத் தினார். பாகிஸ்தான் மக்களவை சபாநாயகர் மிர்சா பேசும் போது, தனது உரையில் பெரும்பகுதி ஆங்கிலத் திலேயே பேசினார். முதல் முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் பெண் சபா நாயகர்களை பெற்று இருக் கிறது என அவர் குறிப்பிட் டார். இருநாட்டு சபாநாய கர்களும், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான பல் வேறு பகுதிகளை கண்ட றிந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவு விருந்து நிகழ்ச் சிக்குப் பின்னர், பாடல், இசைநிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமது முக்தர், சட்ட அமைச்சர் மவுலா பாக்ஸ் சாண்டியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: