பில்கேட்ஸ், கணினி உலகின் சக்கரவர்த்தி என்பது நமக்குத் தெரியும். பில் கேட்ஸ் – மெலிண்டா பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக சில துறைகளுக்கு அவர் கணிசமாக நிதியுதவி செய்து வருவது பலருக் குத் தெரிந்திருக்கலாம். ஏழை விவ சாயக் குடும்பங்களுக்கு உதவ அண்மையில் அவர் 2 பில்லியன் டாலர் நிதியை ( சுமார் 10000 கோடி ரூபாய்) ஒதுக்கியிருக்கிறார். பெரும் பாலான இந்தக் குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கி நடத்தி வரக் கூடியவை. நிலத்தின் தன்மை கெடாமல் பாதுகாத்து உற்பத்தி யைப் பெருக்குவதுதான் நிதியளிப் பின் நோக்கம். ஏழு முக்கியமான பயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதற்கும் சேர்த்து 3 பில்லியன் டாலர் நிதி மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது என்ற விவரத்தோடு ஒப்பிட்டால் பில் கேட்ஸின் உதவி மகத்தானது என்று தெரிந்து கொள்ளலாம். திட்டத்தின் ஏழு முக் கியமான பயிர்களில் மரவள்ளிக் கிழங்கு ஒன்று. அது 50 கோடி ஆப்பிரிக்க மக்களின் முக்கியமான உணவு. உலகிலேயே மரவள்ளிக் கிழங்கை அதிகமான அளவில் உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா. மரவள்ளிக் கிழங்குப் பயிர் இரண்டு முக்கியமான வைரஸ் களால் பாதிக்கப்படுகிறது. பயிரின் இலைகளுமே உண்ணத்தகுந்த வைதான். “கசாவா மொசைக்” நோய் பயிரின் இலைகளைத் தாக் குகிறது. “பிரவுன் ஸ்டீக்” நோய் வேர்களைத் தாக்குகிறது. இந்த நோய்களை எதிர்த்துப் போராடு வதற்கும் மரவள்ளிக் கிழங்கின் ஊட்டச்சத்தினை அதிகரித்து, விஷத் தன்மையைக் குறைப்பதற்கும் கேட்ஸ் பவுண்டேஷன் இந்த நிதியை ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் மரவள்ளிக் கிழங்கு மக்கள் உண வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதை குச்சிக் கிழங்கு என்றும் குறிப்பிடுகிறோம். மர வள்ளிக் கிழங்கைப் பொடி செய்தே ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. வடை, உப்புமா, பாயாசம் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க ஜவ்வரிசி பயன்படுகிறது. உரு ளைக் கிழங்கு, சோளம், மிளகாய் போன்றே மரவள்ளிக் கிழங்கும் உணவு தயாரிப்பில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. தொடக்கத்தில் போர்ச்சுக்கலைச் சேர்ந்த மாலுமிகள் அதை பிரேசி லிலிருந்து ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் கொணர்ந்தனர். சில நூற்றாண்டுகளுக்குள்ளாக வே அது ஆப்பிரிக்காவின் பாரம் பரியமான பயிர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, ஆப்பிரிக்காவின் முக்கியமான உணவுப் பயிராக ஆகிவிட்டது. அதனால்தான் அப் பயிரை நோய் தாக்கினால் அது கோடிக்கணக்கான ஏழை மக்க ளின் வாழ்வாதாரத்தையே பாதிக் கக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது. மரவள்ளிக் கிழங்கில் கால் சியம் அதிக அளவில் உள்ளது. ஆனாலும் அதை உட்கொள்ளும் போது அது வயிற்றை நிறைக்கிறதே தவிர, போதுமான ஊட்டச்சத்தை அளிப்பதில்லை. இந்த சவாலைச் சந்திக்கவே “பயோகசோவா பிளஸ்” என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மரவள் ளிக் கிழங்கின் துத்தநாகம், இரும் புச் சத்தை ஆறு மடங்காகவும் புரோட்டீன் சத்தை நான்கு மடங் காகவும் வைட்டமின் ஏ, ஈ – சத்து களை பத்து மடங்காகவும் அதிகரிப் பது, வைரஸ்கள் தாக்காமல் பாது காக்கும் பயிரின வகைகளைக் கண்டுபிடிப்பது, அதன் சயனஜன் உள்ளடக்கத்தைக் கணிசமாகக் குறைப்பது ஆகியவற்றை நோக் கங்களாகக் கொண்டு அந்த அமைப்பு செயல்படும். பச்சை மரவள்ளிக் கிழங்கு சிதையும்போது விஷத்தன்மை யுள்ள இரு கூட்டுப் பொருட்களை உருவாக்கக் கூடியது. பிரேசில், ஆப்பிரிக்க மக்கள் இந்த விஷத் தை அகற்றும் வழியைக் கண்டு பிடித்து வைத்துள்ளனர். கிழங்கின் தோலை அகற்றிவிட்டு, அதை சில நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து, பின் காயவைத்து சமைத் தால் விஷம் அகற்றப்பட்டுவிடும். இதே முறையில் தயாரிக்கப்படும் ஜவ்வரியும் பாதுகாப்பானது. பயோ கசோவா பிளஸ் குழுவினர் இர ண்டு முக்கிய சாதனைகளை நிகழ் த்தியுள்ளனர். மரவள்ளிக் கிழங்கின் வேர் களில் உள்ள என்சைமின் (வேதி யியல் வினைகளை ஊக்குவிக்கும் பொருள்) அளவை அதிகரித்து அதன் மூலம் புரோட்டீன்கள், அமி னோ அமிலங்களை அதிகரிப்பது, சயனஜன் அளவைக் குறைப்பது என்பது ஒன்று. வைரஸ்களால் தாக்கப்படாமல் இருக்க பயிரின் தாக்குப் பிடிக்கும் திறனை அதி கரிப்பது மற்றொன்று. உயிரியல் மூலக்கூறு (அடிடநஉரடயச biடிடடிபல) அளிக்கும் வாய்ப்புகளை ஏழை களின் வாழ்வை மேம்படுத்தப் பயன்படுத்த முடியும் என்பதற்கு பயோகசோவா அமைப்பு எடுக்கும் முயற்சிகள் நல்ல உதாரணம். (உதவிய கட்டுரை : ‘தி இந்து’ நாளிதழில் டி. பாலசுப்பிரமணியன் எழுதியது).

Leave a Reply

You must be logged in to post a comment.